பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டித்துரையின் தொடர்பு 71

புத்தகங்களை வாங்கிக்கொண்டு போனவர், வறுமை காரணமாக அவற்றை விற்று வந்த பணத்தைத் திருப்பி அனுப்பவில்லை. பல மாதங்கள் ஆகியும் அவரிடமிருந்து செய்தி எதுவும் வராததனல் ஆசிரியருடைய குமாரர் அவருக்கு ஒரு கடிதம் எழுதினர். பிறகு கும்பகோணத்திற்கு நேரில் சென்றும் விசாரித்தார். -

செய்தி தெரிந்தவுடன், சந்திரநாத செட்டியார் மிகவும் வருந்தினர். நீங்கள் அவனை நம்பிப் புத்தகங்களைக் கொடுக்கலாமா? நாணயத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் அல்லவா? எப்படி யாவது நான் வற்புறுத்திச் சொல்லிப் பணத்தை அனுப்பச் சொல் லுகிறேன்' என்று சொல்லி அனுப்பினர்.

வந்தபிறகும் செட்டியாருடைய குமாரரிடமிருந்து எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. ஆகையால் ஆசிரியருடைய குமாரர் ஒரு வக்கீலை அமர்த்தி, ஒரு நோட்டீஸ் கொடுக்கச் சொன்னர்.

சில வாரங்கள் கழிந்தன. அந்த நோட்டீசுக்கும் பதில் ஒன்றும் வராமையிஞ்ல், மேலே வழக்குத் தொடரலாம் என்ற எண்ணத்தில் வக்கீல் தம் குமாஸ்தாவை ஆசிரியரின் குமாரரைப் பார்த்து வரும் படி அனுப்பினர்.

அந்தக் குமாஸ்தா ஆசிரியர் குமாரரைப் பார்க்காமல் நேரே ஆசிரியரிடம் வந்துவிட்டார். தாம் வந்த காரியத்தை ஆசிரியரிடம் சொன்னவுடன் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். நான் சொன்ன தாக உம் சிநேகிதரிடம் போய்ச் சொல்லுங்கள். அந்தத்தொகையை நானே கொடுத்துவிடுகிறேன். அவர் தந்தையார் எனக்குச் செய் துள்ள பேருதவிக்கு இது எம்மாத்திரம்?' என்று சொல்லி அனுப்பி விட்டார்.

தமக்கு ஒருவர் செய்த நன்றிக்கு, அவரது பரம்பரையினர் செய்த குற்றத்தையும் பொறுக்கும் ஆசிரியரது இயல்பை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. -