பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சொந்த வீடு

சொந்த வீடு வாங்கியது

சென்னையில் திருவேட்டீசுவரன் பேட்டையில் பிள்ளையார் கோவில் தெருவில் ஆசிரியர் குடியிருந்த வீட்டிற்கு ஆரம்பத்தில் 20 ரூபாய்தான் வாடகை கொடுத்துக்கொண்டிருந்தார். அவரது குடும்பத்திற்குப் போதிய இடம் அங்கே இருந்தது.

ஆசிரியருடன் கல்லூரியில் பழகி வந்த ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் அவரது வீட்டிற்கு வந்தார். தாம் தமிழில் பள்ளிக் கூடத்து மாணவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அதைப் பார்த்துத் திருத்திக் கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் சொன்னர்.

ஆசிரியர் தமக்கு நேரம் இல்லாமையில்ை தம் குமாரரைப் பார்த்துக் கொடுக்கச் சொன்னர். அவ்வேலை சம்பந்தமாக அந்தப் பேராசிரியர் ஆசிரியர் வீட்டிற்கு அடிக்கடி வரும்போது ஒருமுறை ஆசிரியருடைய குமாரரைப் பார்த்து, வீட்டிற்கு வாடகை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே இருக்கிருர் என்றும் கேட்டு அறிந்து கொண்டார்.

உடனே அந்த வீட்டின் சொந்தக்காரரைப் போய்ப் பார்த்து, அவரிடம், திருவேட்டீசுவரன் பேட்டையிலுள்ள உங்கள் வீட்டை ஏன் இவ்வளவு குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள்? வேறு யாருக்காவது கொடுத்தால் அதிக வாடகை கிடைக்குமே!’ என்று சொன்னர்.

அந்த வீட்டின் சொந்தக்காரராகிய முதலியாருக்கு ஆசிரியரிடம் மிகவும் மதிப்பு உண்டு. இதைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஐயா, நான் அவரிடம் 20 ரூபாய் வாங்குவதே தவறு. என் கையிலிருந்து மாதம் 20 ரூபாய் அவருக்குக் கொடுத்து அவரை அந்த வீட்டில் குடியிருக்கச் சொல்ல வேண்டும். அவர் அவ்வளவு பெரியவர். அவர் குடியிருப்பதனால்தான் இன்றைக்கு என் வீடு ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. எத்தனை பெரியவர்கள் அவரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டிற்கு வருகிருர்கள் தெரியுமா? அவரே இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்த்துக்கொண்டு