பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த வீடு 73 .

போனலன்றி, நான் அவரை என் வீட்டிலிருந்து போகச் சொல்லமாட்டேன். நீர் இதுபோல என்னிடம் வந்து சொன்னதே தவறு' என்று கண்டித்து அனுப்பிவிட்டார்.

மேலும் சிறிது நாள் கழித்து அந்தப் பேராசிரியரே, முதலியாரைப் போய்ப் பார்த்தார். அந்த வீடு சிறியதாகவும் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கிற வாடகையும் குறைவாக உள்ளது. நீங்கள் நல்வ விலே கிடைத்தால் அதை விற்றுவிட்டு: வேறு ஒர் இடத்தில் பெரிய வீடாகவே கட்டலாமே!’ என்று சொன்னர்.

"நான் அந்த வீட்டை விற்பதுபற்றி இதுவரை யோசித்தது இல்லை. அப்படி விற்கிற எண்ணம் வந்தால் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது போய் வாருங்கள். அந்த வீட்டைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு அக்கறை உண்டாவதற்கு என்ன காரணம் என்று எனக்கு விளங்கவில்லை’ என்று சொல்லி முதலியார் அவரை அனுப்பிவிட்டார்.

எனினும் அந்தப் பேராசிரியர் சொன்னது முதலியாரின் மனத்தை உறுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த வீடு நமக்குச் சொந்தம் என்பதல்ைதானே, இப்படிப் பலரும் பல விதமான எண்ணங்களை நம்மிடம் வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக் கிருர்கள்? ஆசிரியர் அவர்களுக்கே அந்த வீட்டை உரியதாக்கி விட்டால் என்ன?’ என்று நினைக்கலானர்.

ஒருநாள் ஆசிரியரிடமே வந்து, ஐயா, உங்களுக்குச் சென்னை யில் வீடு வாங்கும் எண்ணம் உண்டா? அப்படியிருந்தால் நான் இந்த வீட்டை உங்களுக்கே விற்று விட நினைக்கிறேன்' என்று சொன்னதோடு அந்த வீட்டிற்கு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு தொகையைக் குறிப்பிட்டுச் சொன்னர்.

அப்போது கும்பகோணத்தில் ஆசிரியருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தது. அதனல் சென்னையில் புதிய வீடு வாங்குவது பற்றி அவர் சிந்தித்ததே இல்லை. மேலும் சென்னையில் தாம் நிரந்தரமாக இருக்க முடியுமோ, முடியாதோ என்ற சந்தேகமும் இருந்தது. ஆகையால் முதலியார் அப்படிக் கேட்டவுடன், வீடு தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த ஆண்டு அந்த ஆங்கிலப் பேராசிரியர், தமக்குத் தெரிந்த வேறு ஒருவர் மூலமாக முதலியாரிடம் அந்த வீட்டை 4,300 ரூபாய்க்குப் பேசி, முன்பணமும் கொடுத்துவிட ஏற்பாடு செய்தார்.