பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. என் ஆசிரியப்பிரான்

முதலியார் அந்தச் செய்தியை ஆசிரியருக்குச் சொல்லி அனுப் பினர். அதைக் கேட்டவுடன் ஆசிரியருக்கு மிக்க கவலை உண்டா யிற்று. அந்த வீட்டில் கிடக்கும் அத்தனை ஏட்டுச் சுவடிகளையும், புத்தகங்களையும் வேறு இடத்திற்குக் கொண்டுபோக வேண்டுமே! புதிய இடம் வசதியாக இருக்குமோ, இருக்காதோ?’ என்றெல்லாம் குழம்பினர்.

ஒரு நாள் ஆசிரியர் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, முதலியாருக்குத் தெரிந்த கணக்குப்பிள்ளை ஒருவர் தெரு வழியே போனர். ஆசிரியர் அவரை அழைத்து, 'உங்கள் முதலியார் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன் பணம் வாங்கிவிட்டாராமே! முன்பணம் வாங்கப் போவதைக் கொஞ்சம் முன்னல் என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? நானே வாங்கிக் கொண்டிருப்பேனே!’ என்று தெரிவித்தார்.

'போன வருஷமே, முதலியார் அந்த வீட்டை உங்களுக்கு விற்பதாகச் சொன்னராமே. நீங்கள் வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களாம். என்ன காரணத்தினலோ வேண்டாம் என்கிரு.ர்கள்; வேறு இடத்தில் மனைவாங்கி, பெரிய வீடாகக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிரு.ர்கள் போலும்!’ என்று எண்ணிக் கொண்டுதான் வெளியில் வீடு விற்பதைப் பற்றியே அவர்கள் முடிவு செய்தார்கள்’’ என்ருர் கணக்குப்பிள்ளை.

'அப்படியா? அப்போது அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. இப்போது எனக்கு இந்த வீட்டையே வாங்கிக் கொள்ளவேண்டு மென்ற அபிப்பிராயம் இருக்கிறது. அவர் பேசியுள்ள தொகைக்கு மேல் நூறு ரூபாய் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது உதவி செய் கிறேன். எப்படியாவது இந்த வீட்டை எனக்கு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்வி அனுப்பினர் ஆசிரியர்.

அன்று மாலையிலேயே கணக்குப்பிள்ளை வந்தார். உங்களுக்கு நல்ல சமாசாரம் கொண்டுவந்திருக்கிறேன். முதலியார் தாம் வாங்கிய முன்பணத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டார். இந்த வீட்டை உங்களுக்கே விற்பதற்கும் சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. அவ்வளவு எளிதில் காரியம் முடிந்து விடும் என்று அவர் நினைக்கவில்லை. முன் பணம் கொடுத்தவர் தகராறு செய்யக்கூடுமே என்ற கவலை மட்டும் இருந்தது. -