பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த வீடு 75.

கணக்குப்பிள்ளை சொன்னர்; 'நீங்கள் சொன்னதை. முதலியாரிடம் சொன்னேன்.அவருக்கு முதலிலிருந்தே இந்தப் பணம். கொடுத்தவர் விக்கிரய பத்திரத்தில் சில நிபந்தனைகளே எழுதச் சொன்னர். அதுதான் சரியான சாக்கு என்று, இந்த நிபந் தனைகளுக்கு எல்லாம் நான் உடன்படமாட்டேன். இந்தாருங்கள் உங்கள் முன்பணம்' என்று கோபமுடையவரைப் போல நடித்து அந்தப் பணத்தைத் திருப்பிவிட்டார்' என்ருர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு உரிய விலை கொடுத்து அந்த வீட்டை ஆசிரியர் வாங்கினர். தமக்குக் கும்பகோணம் கல்லூரியில் வேலை வாங்கித் தந்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த இல்லத். திற்குப் பெயர் வைத்தார். அந்த வீடுதான் தியாகராச விலாசம்' என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.