பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சில நூல்களின் வெளியீடு

பழைய திருவிளையாடற் பதிப்பு

இப்போது எங்கும் வழங்கும் பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணத்திற்கு முன்பு வேம்பத்துாரார் திருவிளை யாடற் புராணம் என்கிற ஒன்று வழங்கி வந்தது. செல்விநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் அது இயற்றப்பெற்றது. ஆசிரியர் அதை ஆராய்ந்து வந்தார். அதற்காக மதுரை முதலிய இடங்களுக்குச் சென்று, திருவிளையாடல்களை நினைப்பூட்டும் இடங்களைப்பற்றி எல்லாம் விசாரித்துக் குறிப்புக்களைச் சேகரித்தார். வேம்பத்துார் சென்று அந்த நூலாசிரியரைப்பற்றிய செய்திகளைத் தொகுத்தார்.

1906-ஆம் வருஷம் ஜூலை மாதம் 12-ஆம் தேதி அந்த நூல் அரும்பத உரையோடும், வேறு பல ஆராய்ச்சிக் குறிப்புக்களோடும் வெளியாயிற்று. அதற்குப் பாண்டித்துரைத் தேவர் ரூபாய் 200 உதவினர். அந்தக் காலத்தில் அது மிகவும் மதிப்புடைய தொகை. அந்தத் திருவிளையாடலில் பரஞ்சோதி முனிவர் புராணத்தில் இல்லாத பல செய்திகள் புலனயின.

செந்தமிழில் நூல்களை வெளியிட்டது

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து செந்தமிழ் என்ற பத்திரிகை வெளிவந்தது. அதில் அந்தக் காலத்தில் இருந்த புலவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினர்கள். தமிழ்ச் சங்கத் தலைவராகிய பாண்டித்துரைத் தேவர் ஆசிரியப் பெருமானுக்கு அடிக்கடி கடிதம் எழுதி, செந்தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியர் ஒவ் வோர் இதழிலும் கட்டுரை எழுதவேண்டுமென்று வற்புறுத்தி 61(561stir.

“தாங்கள் சொல்வது நல்லதுதான். எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனலும் பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லையே! வேறு பணியை மேற்கொண்டால் இதுவும் செய்ய முடியாது; அதனையும் நிறை வேற்ற முடியாது’ என்று ஆசிரியர் தெரிவித்தார்.

தங்கள் கட்டுரை இருந்தால்தான் பத்திரிகைக்கே மதிப்பு உண்டாகும். தங்கள் விருப்பம் எப்படியோ அந்த வகையில் செய்யுங் கள்' என்று பின்னர் நயந்து எழுதினர்.