பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நூல்களின் வெளியீடு 77

பாண்டித்துரைத் தேவரின் வற்புறுத்தலையும் அவருடைய அன்பையும் அறிந்த ஆசிரியர் செந்தமிழ்ப் பத்திரிகைக்கு ஏதேனும் ஒரு வகையில் நலம் செய்ய வேண்டுமென்று விரும்பினர்.

தாம் ஆராய்ந்து கொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல்களில் எதையேனும் செந்தமிழில் தொடர்ந்து பதிப்பித்து வரலாம். என்ற எண்ணம் உண்டாயிற்று. அதன்படி திருவாரூர் உலாவை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாகச் செந்தமிழில்வெளியிட லானர். அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய அந்த நூல் சுவைமிக்கது. 1905-ஆம் ஆண்டு அந்த நூல் நிறைவேறியது:

ஆசிரியரின் LITT6Ti5ಒT அச்சிடல்

மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம்பிள்ளை பாடிய புராணங் களில் மிகவும் சிறியது தனியூர்ப் புராணம். மாயூரத்தை அடுத்த கூறை நாட்டைச் சேர்ந்த சிவத்தலம் தனியூர். அங்கே உள்ள கோவிலுக்குப் புழுகீசுரம் என்று பெயர். புனுகுப் பூனே பூசித்த பாடல் பெற்ற சிவத்தலம் அது. சங்கநூல்களை அச்சிட்டுக் கொண் டிருந்த ஆசிரியருக்குப் பிள்ளையவர்களுடைய புராணங்களையும். பதிப்பிக்கவேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆகவே அந்தத் தனியூர்ப் புராணத்தை அச்சிட்டார்.

பின்பு மண்ணிப்படிக்கரைப் புராணம் வெளியாயிற்று. அதுவும் மீளுட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய புராணம். மாயூரத்திற்கு அருகில் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் அது. இலுப்பைப்பட்டு என்று இப்போது வழங்குகிறது.

சிவத்தலம் சம்பந்தமான செய்திகளைத் தொகுப்பதிலும், சேகரிப்பதிலும் ஆசிரியருக்குப் பேரார்வம் இருந்தது. ஆகையால் புராணங்களைப் பதிப்பிக்கும்போது அந்த அந்தத் தலத்தைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து முன்னுரையில் காட்டுவார். அவருடைய புராணப் பதிப்புக்களைப் பார்த்தால் சங்கநூல் பதிப்புக்களைப் போலவே, தாம் அது பற்றி ஆராய்ந்து தொகுத்த செய்திகளைத் திரட்டிக் குறிப்புரை முதலியவற்ருேடு வெளியிட்டிருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு நூலே மீண்டும் பதிப்புக்குக் கொண்டு வந்தால் முதலில் பதிப்பித்த பிறகு கிடைத்த ஏட்டுச் சுவடிகளி' லிருந்த திருத்தங்களை அமைத்துக் கொள்வார். அதோடு வேறு பல புதிய பகுதிகளையும் அதில் சேர்ப்பார்.

சீவகசிந்தாமணி முதலிய நூல்களைப் பார்த்தால் ஒவ்வொரு பதிப்பிலும் ஏதேனும் அருமையான புதிய சிறப்பு அமைந்திருப்