பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

பொருளை அறிந்து 'உதயணன் சரித்திரம்' என்ற பகுதியை அந்தப் பதிப்பின் அங்கமாகச் சேர்த்தார்கள். அகநானூற்றைப் பதிப்பிக்க நேரம் கிடைக்கவில்லை. எப்போதும் உழைத்துக் கொண்டே இருந்த அவர்கள் ஏதேனும் பதிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். ஆகவே அவர்கள் விரும்பியபடி எல்லா நூல்களையும் பதிப்பிக்க இயலவில்லை. ஆண்டவன் அருளால் 88 ஆண்டு வாழ்ந்த அவர்கள் பதிப்பு வேலையைத் தொடங்கின காலமுதல் இறுதி வரையில் அந்தத் தொண்டை நிறுத்தவே இல்லை.

' இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்;-திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்க வேகடைக்கண் பார்'

என்று தமிழினிடம் விண்ணப்பம் செய்து கொண்டார்கள்.

அவர்களுடைய வரலாற்றின் பிற்பகுதியை எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருடைய திருக் குமாரராகிய அமரர் திரு கல்யாண சுந்தரம் ஐயரவர்களுக்கு இருந்தது. என் சரித்திரத்தின்" முகவுரையில், பின் நிகழ்ச்சிகள் சம்பந்தமான குறிப்புக்கள் ஒழுங்கு படுத்தி வைக்கப் பெற்றுள்ளன. திருவருள் துணைகொண்டும் அன்பர்கள் உதவி கொண்டும் என் சரித்திரத் தின் தொடர்ச்சி யாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாம் என்று கருதியுள்ளேன்” என்று எழுதியுள்ளார்கள். ஆனல் அவர்கள் நினைத்த வண்ணம் எழுத முடியவில்லை. அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்கள் யான் இதை எழுத மிகவும் உதவியாக இருந்தன.

ஐயரவர்களுக்கு அவ்வப்போது பலர் கடிதங்கள் எழுதியதுண்டு. அவற்றையெல்லாம் அவர்களுடைய நூல் நிலையத்தில் பிரதி செய்து பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் படித்துப் பார்த்து, இந்த வரலாற்றை எழுத உரியவற்றைப் பயன்படுத்திக் கொண்டேன். -

முருகப் பெருமான் திருவருளாலும் என் ஆசிரியப் பெருமான் திருவருளாலும் என் ஆசிரியப்பிரான்’ என்ற பெயருடன் இதை வெளியிடுகிறேன். அவர்கள் வாழ்ந்த நெடுங்காலத்தில் எத்தனையோ வகையான இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்ள். அங்கங்கே பல பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கும். அவற்றையெல்லாம்_தொகுத்து வகுத்து வெளியிட்டால் இந்த வரலாறு இன்னும் விரிவாக அமைந்திருக்கும். , *

ஆனால் என்னுடைய சிறிய அறிவையும் ஆற்றலையும், ஐயரவர்கள் என்னிடம் வைத்திருந்த பேரன்பையும் துணையாகக் கொண்டு இதை இந்த அளவாவது எழுதி முடிக்க முருகன்_திருவருள் செய் தானே என்று அப்பெருமானை மனமார வழுத்துகிறேன்.

14—9–1983 கி. வா. ஜகந்நாதன்