பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நூல்களின் வெளியீடு 79

கிருஷ்ணையர் நச்சினர்க்கினியர் என ஒரு பத்திரிகையையே நடத்தி வந்தார்.

நச்சினர்க்கினியர் பெருமையைப் பற்றி ஆசிரியர் பேசும் போது தமிழ்ச்சங்க விழாவிற்கு வந்திருந்த சோழவந்தான் தமிழ்ப்புலவர் அ. சண்முகம்பிள்ளை உடனே எழுந்தார். அவர் தம்முடைய கையில் தங்கத் தோடா அணிந்திருந்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டு, அந்தத் தோடாவைக் கழற்றி வைத்து நச்சினர்க்கினியர் நினைவுச் சின்னத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசிரியரை வணங்கினர். அப்போது எல்லோரும் உணர்ச்சி மிக்கவர்களானர்கள்.

அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த வயி. நாக. ராம. இராமநாதன் செட்டியார் ஒரு வெண்பாப் பாடித் தம்முடைய காணிக்கையாக 20 ரூபாய் தந்தார். அந்தத் தொகையைக் கோடி என்று சொல்வது ஒரு மரபு. .* " தன்மதுரை யாம்பாண்டிச் சாமி நடாத்துதமிழ்த்

தென்மதுரைச் சங்கஞ் செழித்தோங்க-நன்மனத்தால் நாடியா ரும்புகழும் நாவலீர் கேண்மின் ஒரு கோடியான் ஈயும் கொடை,' - இந்த விழாவுக்கு வேம்பத்துரர் வித்துவான் சிலேடைப்புலி பிச்சுவையரும் வந்திருந்தார். அவர் அப்போது பாடிய பாட்டு:

சைவம் தழைக்குமிடம் சாத்திரமீ தோங்குமிடம் தெய்வப் புலவர்குழாம் சேருமிடம்-கைவரைநேர் துன்னலந்தாழ் பாண்டித் துரைப்பூ பதிவளர்க்கும் கன்னிபுரம் மேவியசங் கம்.'

கிருஷ்ணசாமி ஐயர் செய்த உதவி

சென்னையில் இருந்த வி. கிருஷ்ணசாமி ஐயர் பல வகையில் வித்துவான்களுக்கும், புலவர்களுக்கும் உதவி செய்து வந்தார். அவரே சம்ஸ்கிருதக் கல்லூரியை நிறுவினவர். ஆசிரியப் பெரு மானிடம் அவருக்கு மிக்க மதிப்பு இருந்தது. சிந்தாமணியின் 2-ஆவது பதிப்பை ஆசிரியர் அவரிடம் கொடுத்தபோது அதில் அமைந்திருக்கும் முகவுரையைக் கண்டு மிகவும் பாராட்டினர். 'தமிழில் இப்படி அருமையான நூலே இந்தக் காலத்தில் யார், பதிப்பிக்கிருர்கள்? தங்கள் அறிவின் நுட்பத்தையும், உழைப்பையும் இந்தப் பதிப்புக் காட்டுகிறது” என்று ரூ. 70 கொடுத்தார். அதோடு ஆசிரியருக்கு வேறு வகையிலும் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று எண்ணினர். .