பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 என் ஆசிரியப்பிரான்

அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் திராவிடக் கல்விக் கழகம் என்ற ஒன்று இருந்தது. பெரும்பாலும் ஆங்கிலம் தெரிந்தவர்களே அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அந்தச் சபையில் ஆசிரியப் பெருமானை ஒர் உறுப்பினராகச் சேர்க்க வி. கிருஷ்ணசாமி ஐயர் சொல்லி ஏற்பாடு செய்து விட்டார். பிறகு, தமிழ்ப் பரீட்சாதிகாரியாகவும் ஆக்குவதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்தார். அவ்வாறே ஆசிரியர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பரீட்சாதிகாரியானர். அதைப்பற்றிப் பல்கலைக் கழகக் கூட்டம் ஒன்றில் பலர் ஆசிரியருக்கு இந்தப் பதவியைக் கொடுக்கக் கூடாது என்று டை கூறிஞர்கள். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இத்தகைய வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டார் என்று பெரும்பாலானவர்கள் சொன்னர்கள். கிருஷ்ணசாமி ஐயர் ஏதேனும் ஒன்றை நினைத்தால் அதைச் செய்தே திருவார். அதற்கு எதிராக எந்தத் தடை வந்தாலும் கலங்க மாட்டார். பெரும் பாலானவர்கள். ஆசிரியரைப்பற்றிக் குறை கூறின போது, கிருஷ்ணசாமி ஐயர் அவர்களிடத்தில் பல நியாயங்களே எடுத்துக் காட்டி, சில உரைகளை வன்மையாகவும் சொல்லி அவர்களது வாயை அடக்கினர். ஆங்கிலம் தெரியாதவர் என்று சொல்கிறீர்களே! ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் அவருடன் தொடர்பு கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கில நாட்டு ஜி. யு. போப், பிரெஞ்சு நாட்டு ஜூலியன் வின்சன் ஆகியோர் அவரது பெருமையை அறிந்து அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதுகிருர்களே! உங்களில் யாருக்காவது அத்தகைய பெருமை உண்டா? அவர்களுடைய பதிப்புக்கள் ஆங்கிலேயர்களைப்போன்ற அறிவுத் திறமையைக் காட்டுவதாக இருக்கின்றனவே! அவற்றை எல்லாம் பார்க்காமல் ஏன் உங்கள் இழிந்த குணத்தை வெளிப் படுத்திக் கொள்கிறீர்கள்?’ என்று வன்மையாகப் பேசினர். மற்றவர்கள் எல்லாம் அதைக் கேட்டு வாயடங்கினர். ஆசிரியப் பெருமான் அந்தச் சபையில் 30 ஆண்டுக் காலம் தொடர்ந்து உறுப்பினராக இருந்து வந்தார். - -

புதிய மேசை

1908-ஆம் ஆண்டு ஆரம்பத்தில், தம்முடைய சிறிய தகப்ப னருடைய புதல்வியின் கடிமணத்திற்காக ஆசிரியர் யூரீரங்கம் போயிருந்தார். தம் குடும்பத்துடன் ஒரு வாரம் அங்கே போய் இருந்துவிட்டு வந்தார். அப்படியே ஒரு நாள் திருவாவடுதுறை. சென்று தங்கி, ஆதீனத் தலைவருடன் அளவளாவினர். சென்னைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆயிற்று. வந்த அன்று கல்லூரிக்குப் போன போது அவரது வகுப்பு அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. அகிங்ருந்த மேசை, நாற்காலி, மேடை எல்லாம் மாற்றப்பட்டு: