பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நூல்களின் வெளியீடு 8t

இருந்தன. எதற்காக அப்படி மாற்றினர்கள் என்று தெரியாமல் கல்லூரி எழுத்தரிடம் அதைப்பற்றி விசாரித்தபோது, :தமிழ் வகுப் புக்கு இந்த அளவுக்குப் போதாதோ?’ என்று அவர் சொன்னர். அவருக்குத் தமிழின் பெருமையும் தெரியாது; ஆசிரியப்பெருமானு டைய பெருமையும் தெரியாது.

அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஸ்டோன் துரை என்பவர். அவரிடம் ஆசிரியர் இந்த மாற்றத்றைத் தெரிவித்த போது, கவனிக்கிறேன்' என்று அவர் சொன்னர். இடைவேளையில் ஆசிரியர் உணவுக்குச் சென்று திரும்புவதற்குள் முன்பு எப்படி இருந் ததோ அப்படியே வகுப்பறை அமைக்கப் பெற்றிருந்தது. அப்படி முதல்வர் உத்தரவு இட்டுவிட்டார். அங்கு நிகழ்ந்த மாற்றம் முதல் வருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்பது பின்னர்த்தான் தெரிய வந்தது.

வ. உ. சி. கடிதம்

1908-ஆம் வருஷம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின் மேலே சிறையதிகாரிகள் தணிக்கை செய்த குறிப்பு இருந்தது. கடிதம் சிறையிலிருந்து வந்திருப்பதாக அந்த அடை யாளம் காட்டியது. நமக்குச் சிறையிலிருந்து யார் கடிதம் எழுதப் போகிரு.ர்கள்?’ என்று எண்ணி ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார்.

அப்போது கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம்பிள்ளே கோயம்புத்துரர்ச் சிறையில் இருந்தார். அவர் தமிழிலும் நல்ல பயிற்சி உள்ளவர். அவரே அந்தக் கடிதத்தை 14-9-08-ஆம் தேதி எழுதியிருந்தார். அவர் சிறையில் திருக்குறளை ஆராய்ச்சி செய்து வந்தார். தாம் திருக்குறளை ஆராய்ச்சி செய்வதாகவும் குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருவதாக வும் அதில் குறித்திருந்தார். அதில் தமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்கள் சிலவற்றை எழுதி, அவற்றை விளக்கவேண்டுமென்று கேட்டிருந்தார். ஆசிரியர் அவற்றிற்கேற்றபடி விடை எழுதி அனுப்பினர்.

தேதியூர் மகாதேவசிவன்

ரதசப்தமி சமயத்தில் திருவாவடுதுறையில் திருவிழா நடை பெறும். அந்தத் திருவிழாவுக்கு ஆசிரியர் திருவாவடுதுறை சென்று வருவார். 1909-ஆம் ஆண்டும் வழக்கம்போலத் திருவாவடுதுறை சென்றிருந்தார். அப்போது தேதியூர் மகாதேவ சிவன் என்ற

3605–6