பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 என் ஆசிரியப்பிரான்

பெரியவர் வந்திருந்தார். அவர் பல தலங்களைப்பற்றிய செய்தி களைத் தெரிந்து வைத்திருந்தார். ஆசிரியருக்கும் தலங்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வைத்துக் கொள்வதில் ஊக்கம் உண்டு. எனவே ஆசிரியர் அவரிடம் சில முக்கியமான தலங்கள்சம்பந்தமான திர்த்தம், விருட்சம், மூர்த்தி என்னும் விவரங்களே விரிவாகக் கேட்டு எல்லாவற்றையும் குறிப்பு எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில் முத்து என்றும் வண்ணுரப் பரதேசி என்றும் வழங்கிய ஒருவரிடம் இத்தகைய குறிப்புக்களைக் கேட்டு எழுதிக்கொண்டதை நான் அறிவேன்.

அரச வனம்

அந்த ஆண்டு திருவாவடுதுறையில் குருபூஜை மிகவும் சிறப் பாக நடந்தது. வடமொழிப் புலவர்களும், தென்மொழிப் புலவர் களும், சங்கீத வித்துவான்களும் வந்து கூடியிருந்தார்கள். இராம நாதபுரம் இராஜராஜேசுவர சேதுபதி வந்திருந்தார். குருபூஜை அன்று அடியவர்களுக்கு எல்லாம் அன்னம் பாலிப்பார்கள். அதை "மாகேசுவர பூஜை' என்று சொல்வது வழக்கம். (மாகேசுவரர்சிவனடியார்). அந்த அன்னம்பாலிப்பைச் சேதுபதி மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற ஆசிரியர் இதைப் பற்றி அவரிடம் பாராட்டிப் பேசினர். 'இந்தத் தலம் அரச வனம் என்னும் பெயருடையது. இன்று இங்கே அரச அனந்தான் நடக் கிறது' என்று சொல்லிப் பாராட்டினர். திருவாவடுதுறையில் அரசு தல விருட்சம். அங்கே அரச மரங்கள் ஏராளமாக உள்ளன. அதனுல் அரச வனம் என்று திருவாவடுதுறைக்குப் பெயர். சேதுபதி மன்னர் வழங்கும் அன்னம் அன்று எல்லோருக்கும் கிடைக்கிறது என்ற பொருளைத்தான் அரச அனம் எனச் சிலேடை யாக ஆசிரியர் பேசினர். இதைக் கேட்ட மற்ருெரு புலவர் எல்லோரும் உண்ணுவதற்குப் புறப்பட்டபோது, போஜனத்திற்குப் போ ஜனமே" என்று சொன்னவுடன் எல்லோரும் சிரித்தார்கள். ஆசிரியப் பெருமான் சிலேடை பண்ண அவருக்கும் சிலேடை உணர்ச்சி வந்துவிட்டது.

அச்சகத்தார் புரூப்பில் குறிப்பையும் சேர்த்து அச்சிட்டது

தொல்லை தரும் ஏட்டுச்சுவடியில் உள்ளதைப் படியெடுத்து ஆராய்ந்து அச்சுக்குச் சித்தம் செய்து அனுப்புவது என்பது மலைமேல் ஏறுவது போன்ற காரியம். வெறும் உரைநடை நூலாக இருந்தால்

அச்சிடுவதில் அதிகத் தொல்லே இராது.செய்யுள் நூலாக இருந்தால் அச்சுக் கோப்பவரால் பல பிழைகள் நேரும். அவற்றை எல்லாம்