பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நூல்களின் வெளியீடு 83

திருத்தி ஆழ்ந்து பார்த்து, செப்பனிட்டு ஆசிரியர் அனுப்புவார். அப்படித் திருத்தி அனுப்பும்போதும் அந்தத் திருத்தங்களைச் செய் யாமல் சில சமயத்தில் அச்சடித்து அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் திருத்தங்களைப் போடும்போது புதுப்பிழைகளைச் செய் வார்கள். அச்சகங்களில் புரூப் திருத்தங்கள் செய்வதற்குத் தகுதி யானவர்களே நியமிப்பதில்லையே என்றவருத்தம் ஆசிரியருக்கு உண்டு.

ஒரு சமயம் அச்சகத்திலிருந்து வந்த புரூப்பில் அதிகமான பிழைகள் இருந்தன. அவற்றை எல்லாம் திருத்திவிட்டு, ஓர் ஒரத்தில் இந்த வேலையைச் செய்தவர் எழுத்தறிவு சிறிதும் இல்லாதவர் என்று தோன்றுகிறது. தயை கெய்து கவனிக்க வேண்டும்” என்று குறித்து அனுப்பினர்.

மறுதடவை புரூப்' வந்தபோது அச்சகத்திலேயே நன்கு திருத்தப்பெற்று, அதிகப் பிழைகளின்றிப் புரூப் வரவேண்டும்’ என்று ஆசிரியர் எழுதியிருந்த குறிப்பையும் அச்சுக்கோத்து நூல் பகுதியோடு சேர்த்து அதை அனுப்பியிருந்தார்கள்! இப்படி எத்தனையோ வேடிக்கைகளை, அச்சகத் திருவிளையாடல்களே, இப்போதும் கூடப் பார்க்கலாம்.

ஜூலியன் வின்ஸன் கடிதம்

பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஜூலியன் வின்சன் ஆசிரியருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். பெருங்கதையை ஆசிரியர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிருர் என்பதை அறிந்த அவருக்கு அதிக ஊக்கம் உண்டாயிற்று. பிருகத்கதா என்னும் வடமொழி நூலே அவர் படித்திருந்த காரணத்தில்ை அதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பு பெருங்கதை என்பதை அறிந்து அதை விரைவில் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.

சீவக சிந்தாமணியின் இரண்டாவது பதிப்பை ஆசிரியர் அவருக்கு அனுப்பவில்லை. ஆனலும் புதுச்சேரியிலிருந்து பிரெஞ்சுக். காரர் ஒருவர் அவருக்கு ஒரு பிரதியை அனுப்பியிருந்தார். அதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. அதன்மேல் 21-5-1909 அன்று ஒரு கடிதம் எழுதினர்.

"என்தன்பிற்குரிய பெருஞ் சிறப்புப் பொருந்திய ஐயனே, நீங்களெழுதியருளிய திருமுகம் எங்களிடம் சரியாய்ச் சேர்ந்தது. அதல்ை மிகவுங் களிகூர்ந்து மகிழ்ந்தோம். நாமெழுதினதின் பேரில் நீங்கள் சொன்னது பெரிய சந்தோஷத்துடனே பார்த்து வருகின்றேன். .