பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 என் ஆசிரியப்பிரான்

நீங்கள் சீக்கிரம் உதயணன் கதையை அச்சிட்டு வெளியே கொடுப்போமென்றதால் தமிழைக் கற்கிறவர்கட்கெல்லாம் ஒப்பி லாக் களி பிறந்தோங்கும்.அச்சிறந்த நூல் வெளிப்படு மாத்திரத்தில் எங்கட்கிரண்டு பிரதிகளே ரிஜிஸ்டர்ட் தபாலில் அனுப்பி வைக்க வேண்டுமென்று மன்ருடுகிருேம். அவை சென்ற பிறகு விலையும் தபாற் கூலியும் செல்விப்போம்.

நீங்களச்சிட்ட சிந்தாமணி இரண்டாம் பதிப்போவென்ருல் அதிைெரு பிரதியை எங்கட்குப் புதுச்சேரியினின்று ஒரு சிநேகித ரனுப்பினர். அவருக்கும் பணத்தை வருவித்தோம்.

நீங்கள் 5ು.೧ು செளக்கியமாய் நீடு வாழ்கவென்று எழுதினேன்.

இங்ங்ணம், அன்பன். Prof. Julion Vinson (பேராசிரியர் ஜூலியன் வின்சன்)

இந்தக் கடிதத்தைக் கண்ட ஆசிரியப்பிரான் மகிழ்ந்தார். :தமிழ்நாட்டுக்கு அப்பால் நெடுந்துாரத்தில் உள்ள நாட்டில் இருப்பவருக்குத் தமிழிடம் இவ்வளவு பற்றும் தமிழ் நூல்களில் விருப்பமும் தமிழ் அறிஞர்களிடம் மதிப்பும் இருக்கின்றனவே! தமிழ்நாட்டில் வாழ்கிற பலருக்கு இத்தகைய உணர்ச்சி இருக்க வில்லையே! அயல் மொழியாகிய ஆங்கிலத்தில் உள்ள மோகத்தில் ஒரு சிறிதளவாவது தமிழில் இருக்குமானல் எவ்வளவு நன்ருக இருக்கும்!" என்று வருந்தினர்.

தந்திக்குத் துதிக்கை

1909-ஆம் ஆண்டு திருவாவடுதுறை மடத்தில் குருபூஜை நடந்தது. அந்தச் சமயம் திருக்கோடி காவல் கிருஷ்ணயர் வயலின் கச்சேரி செய்தார். அப்போது இராமநாதபுரம் சேதுபதி வந்திருந்தார். அரசருக்கு இசையில் நல்ல பயிற்சி உண்டு. அவரே நன்ருகப் பாடுவார். திருப்புகழை மிக இனிமையாகப் பாடுவது அவரது வழக்கம். வித்துவான் ‘வாதாபி கணபதிம் என்று ஆரம்பித்து மிகச் சிறப்பாகப் பாடினர். எல்லோரும் மகிழ்ந்து தலையாட்டினர். - -

அப்போது ஆசிரியர் தந்திக்குத் துதிக்கை உண்டு: என்று சிலேடையாகச் சொன்னர். தந்தி என்ருல் யானை என்றும் பொருள்.

துதிக்கை-தும்பிக்கை, பாராட்டுதல்.