பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சில நிகழ்ச்சிகள்

gl. Ц. போப்பின் பழக்கம்

ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஜி. யு. போப் காலமாகிவிட்டார். அவருடைய மகளுர் ஜே.ஏ.ஆர். போப் என்பவர் தம்முடைய தந்தையின் நண்பர்களை எல்லாம் தெரிந்து கொண்டிருந்தார். ஜி. யு. போப், ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலையின் முதல் பதிப்பில், பல அடையாளங்களைச் செய்து இடையிடையே பல குறிப்புக்கள் அடங்கிய காகிதங்களை வைத்துப் பைண்டு செய்து வைத்திருந்தார். தம்முடைய தந்தையாரின் நினைவு தமிழகத்திலுள்ள பெரும்புலவராகிய ஆசிரியப்பிரானுக்கு என்றும் இருக்கவேண்டும் என்றுநினைத்து அந்த நூலே ஆசிரியருக்கு அனுப்பித் தம்முடைய தந்தை காலஞ்சென்ற செய்தியை எழுதியிருந்தார். அந்த மணிமேகலை நூலைப் பார்த்த ஆசிரியர் அதைப் பொன்னே

போலப் பாதுகாத்து வந்தார்.

ஜி. யு. போப்பை நேரில் ஆசிரியப்பிரான் பார்த்ததில்லை. என்ருலும் இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்து வந்தது. அதல்ை அவர்களுடைய அன்பு வளர்ந்தது. ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்' என்ற குறளுக்கு இலக்கியமாக அவர்களுடைய நட்பு இருந்தது.

போப் திருக்குறளையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிரு.ர்.

சடகோபாசாரியார்

கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளியில் வடமொழிப் புலவ ராகச் சடகோபாசாரியார் என்பவர் இருந்தார். அவர் நன்ருகப் படித்தவர். சிறந்த ரசிகர். ஆசிரியர் அவரைத் திருவாவடு துறைக்கு அழைத்துச் சென்று, அம்பலவாண தேசிகரால் சிறப்புப் பெறும்படி செய்தார். மிகவும் சுவையாகப் பேசுகின்ற சடகோபா சாரியாருடன் ஆசிரியர் அடிக்கடி பழகி, அவர் வாயிலாகப் பல வடநூல் செய்திகளைத் தெரிந்துகொள்வார். நகைக்சுவை ததும்பப் பேசுவதில் சடகோபாசாரியார் வல்லவர்.

1902-ஆம் ஆண்டு இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மிகவும் கடுமையான நோயில் வீழ்ந்துவிட்டார். இனிப் பிழைக்க