பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 என் ஆசிரியப்பிரான்

மாட்டார் என்றே தெரிந்தது. படுத்த படுக்கையாகக் கிடந்தார். .

தம் நண்பராகிய அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆசிரியர் அங்கே சென்ருர், அவரைச் சேர்ந்தவர்கள் பலர் வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டுத் திண்ணையில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். ஆசிரியரைக் கண்டவுடன், 'வாருங்கள்: நீங்கள் வந்திருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவர் கிடக்கிருர்; கண்ணேத் திறக்கவில்லை; பேசவும் இல்லை; இனி நாம் செய்ய என்ன இருக்கிறது?’ என்று சொன்னர்கள்.

ஆசிரியர் உள்ளே சென்ருர், சடகோபாசாரியார் இருக்குமிடம் சென்று கையில்ை அவரது உடலைத் தடவிவிட்ட படியே, 'உடம்பு எப்படி இருக்கிறது?’ என்று மெள்ளக் கேட்டார். கண்ணை மூடிக்கொண்டு கிடந்த சடகோபாசாரியார் உடனே கண்ணேத் திறந்தார். அதைக் கண்டு எல்லோரும் வியப்படைந் தனா.

'நீங்கள் வந்தது மிகவும் சந்தோஷம். நான் விடை பெற்றுக் கொள்கிறேன். இங்கே எல்லாரும் எல்லாவற்றையும் சித்தம் பண்ணி வைத்திருக்கிருர்கள். வீட்டிலே தளிகை இல்லை. பெருமாள் கோவிலிலேயே நன்ருகப் பிரசாதம் செய்யும்படி சாமான்களை அனுப்பியிருக்கிருர்கள். போக்கியமாக இருக்கவேண்டுமென்று சொல்வி அனுப்பியிருக்கிருர்க்ள்; எல்லோரும் என்னை வழி அனுப்பத் தான் தயாராய் இருக்கிரு.ர்கள். ஆனல் இவன்தான் இன்னும் கிளம்பாமல் இருக்கிருன்' என்று வேதனையும், நகைச்சுவையும் தோன்றச் சொன்னர். அவர் தம் ஹாஸ்ய உணர்ச்சியைத் தாம் சாகும் காலத்திலும் விடவில்லை. மரண வேதனையையும் மிஞ்சிய அவருடைய மன நிலையை அறிந்து ஆசிரியர் வியப்படைந்தார்.

அச்சகம் பெற மறுத்தது

ஆசிரியர் புத்தகங்களே அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் ஆசிரியருக்கு அந்த வகையில் ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று நினைத்தார். அடிக்கடி அச்சகத்திற்கே போய் ஒரு புத்தகம் அச்சிடுவதற்குள் பலமுறைகள் அல்லலுற வேண்டியிருக்கிறது என்பதையும் உணர்ந்துகொண்டார். ஆகையால் அத்தகைய தொல்லை இல்லாமல் இருக்க ஆசிரியப்