பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நிகழ்ச்சிகள் 87

பெருமானே ஒர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினர்.

ஒரு முறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தபோது, 'நான் ஒரு முக்கியமான செய்தியைத் தங்களுக்குச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். தாங்கள் பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங் களைக் கொடுத்துத் தொல்லைப்படுகிறீர்கள். தாங்களே ஒர் அச்ச கத்தை வைத்துக் கொண்டால், அதில் தங்கள் புத்தகங்களே மிக விரைவில் அச்சிட வசதியாக இருக்கும் அல்லவா? மடத்திலிருந்தும் வேறு நண்பர்களிடத்திலிருந்தும் சேர்த்து 5 ஆயிரம்ரூபாயை நாம் தங்களுக்கு அளிக்கிருேம். அதை வைத்துக் கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் தங்களுக்கு இன்று இருக்கிற பல தொல்லைகள் குறையும். தங்கள் விருப்பத்தை அறிந்து இதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன்' என்று மிக அன்புடன் சொன்னர்.

அவருடைய அன்பை நன்கு உணர்ந்துகொண்ட ஆசிரியர் உடனே பதில் சொல்லாமல், நாளைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்கிறேன்' என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது ஆதீனத் தலைவர், என்ன, எப்போது அச்சகத்தைத் தொடங் கலாம்?’ என்று கேட்டார். -

'சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நன்ருக உணர்கிறேன். நான் படும் தொல்லைகளை இந்த அளவு தெரிந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. அச்சகம் இருந்தால் விரைவாக நூல்களை அச்சிடலாம் என்பது உண்மைதான். ஆளுல் இன்று புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகிய வற்றை மட்டும் வாங்கித் தருவதற்குத்தான் நான் கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது. ஒர் அச்சகத்தை வைத்து நடத்த வேண்டிய வேலையும் எனக்கு ஏற்பட்டுவிடுமானல் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்ய வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டுவிடுமே! அப்படியானல் நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக் குமா என்று அஞ்சுகிறேன். சந்நிதானம் சொல்வதை நான் மறுப்ப தாக எண்ணக் கூடாது. என்னுடைய வேலை சிரமமின்றி, வேகமாக நடக்க வேண்டுமென்ற திருவுள்ளத்துடன்தான் சந்நிதானம் இப்படி உத்தரவிடுகிறது என்பதை அறிந்து கொண்டுள்ளேன். ஆனல் அச்ச கத்தால் உண்டாகின்ற தொல்லைகளைப் பற்றியும் சந்நிதானம் சிந்திக்கவேண்டும். எனக்கு அநுபவத்தில் அது நன்ருகத் தெரியும். வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்குவது எளிய காரியம் அன்று.