பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xI

நன்றாகப்‌ பதிந்தன. பெரிய ஆதீனத்தின்‌ தொடர்பால்‌ பலவகை மக்களின்‌ பழக்கம்‌ இவர்களுக்கு ஏற்பட்டது. பெரும்புலவருடைய தொடர்பால்‌ பல நூல்களில்‌ அறிவு உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால்‌ பல துறையிலும்‌ அறிவு சிறந்தது வெவ்வேறு ஊர்களுக்குத்‌ தம்முடைய ஆசிரியருடன்‌ செல்ல வேண்டியிருந்தமைய௱ல்‌ பல தலங்களைப்பற்றிய செய்திகளும்‌ அங்கங்குள்ள பெரிய மனிதர்களின்‌ பழக்கமும்‌ ஐயரவரிகளுக்குக்‌ கிடைத்தன.

பிள்ளையவர்கள்‌ மறைவுக்குப்‌ பின்பு, திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ தொடர்பு ஐயரவர்களுக்குப்‌ பின்னும்‌ இறுகலாக அமைந்தது. அதற்குமுன்‌ பிள்ளையவர்கள்‌ மூலமாக ஆதீனத்தின்‌ தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்பின்‌ ஆனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம்‌ கேட்கப்‌ புகுந்தார்கள்‌ ஐயரவர்கள்‌. அதேடு மாணாக்கர்களுக்குப்‌ பாடம்‌ சொல்லும்‌ பணியையும்‌ மேற்கொண்டார்கள்‌. இதனால்‌ இவர்களுடைய தமிழறிவு உரம்‌ பெற்றுவந்தது.

அக்காலத்தில்‌ கும்பகோணம்‌ அறசாங்கக்‌ காலேஜில்‌ தியாகராச செட்டியார்‌ என்ற பெரும்புலவர்‌ தமிழாசிரியராக இருந்தார்‌. அவர்‌ மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்‌களிடம்‌ படித்தவர்‌. அவா்‌ ஓய்வு பெறவேண்டிய காலம்‌ வந்தபோது அவர்‌ தம்முடைய இடத்தில்‌ ஐயரவர்களை நியமிக்கும்படி செய்தார்‌. 1880ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 26ஆம்‌ தேதி முதல்‌ ஐயரவர்கள்‌ கல்லூரித்‌ தமிழாசிரியராக வேலை பார்க்கத்‌ தொடங்கினார்கள்‌.

நிறைந்த தமிழ்ப்‌ புலமை, எதையும்‌ சுவையாக எடுத்து விளக்கும்‌ ஆற்றல்‌, இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள்‌ சிறப்பாகப்‌ பெற்றிருந்தமையால்‌ கல்லூரி மாணாக்‌கர்கள்‌ உள்ளத்தை எளிதில்‌ கவர்ந்தரார்ள்‌. ஆங்கில மோகம்‌ உச்சநிலையில்‌ இருந்த காலம்‌ அது, ஆங்கிலமும்‌ பிற பாடங்‌களும்‌ கற்பிக்கும்‌ பேராசிரியர்களிடம்‌ மாணாக்கர்களுக்கும்‌ மற்றவர்களுக்கும்‌ நல்ல மதிப்பு இருந்து வந்தது. இங்கிலீஷ்காரர்‌கள்‌ சிலர்‌ அந்தப்‌ பாடங்களைக்‌ கற்பித்து வந்தார்கள்‌. அதனாலும்‌ அவற்றிற்கும்‌ அவற்றைக்‌ கற்பிப்பவர்களுக்கும்‌ மதிப்பு உயர்ந்‌திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை. அவர்களுக்குக்‌ கிடைத்த ஊதியமும்‌ மிகக்குறைவு. கல்லூரிச்‌ சேவகனுக்கு அடுத்தபடி சம்பளம்‌ வாங்கியவர்‌ தமிழாகிரியரே.

இத்தகைய நிலையில்‌ ஐயரவர்கள்‌ மாணாக்கர்களின்‌ உள்ளத்தைப்‌ பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச்‌ சமமான