பக்கம்:என் சுயசரிதை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இருவரும் அதிகாலையில் வண்டியிலேறி ஸ்மசானத்திற்குப் போயிருப்பதாக சொன்னார்கள். இது என்ன விந்தை என்று ஆச்சரியம் கொண்டவர்களாய் அவர்களிருவரும் திரும்பி வந்தவுடன் விசாரிக்க பின் வருமாறு எங்கள் தந்தையார் எங்களுக்கு தெரிவித்தார். “நேற்றிரவு உங்கள் தாயார் இனி தான் அதிக காலம் பூமியிலிருப்பதாக தோற்ற வில்லை. ஆகவே தன் ஆயுள் முடிந்தவுடன் தனக்கு சமாதி வைக்க வேண்டு மென்று தெரிவித்து, அதற்குத் தக்க இடம் ஈம பூமியில் ஏற்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்கள். உடனே புறப்பட்டுப் போனோம். அங்கு இடம் ஒன்றைக் காட்டினார்கள்", என்று சொன்னார். பிறது அன்றைத் தினமே முனிசிபாலிடியாருக்கு அவ்விடத்தை வாங்குவதாக ஏற்பாடு செய்துக் கொண்டார். இது நேர்ந்த காலத்தில் என் தாயாருக்கு உடம்பில் முக்கியமாக நீர் வியாதியைத் தவிர வேறெரு நோயுமில்லை. பிறகு அவ்வருஷமே அச்டோபர் மாதம் மரணமடைந்தார்கள். மரணத்திற்குக் காரணம் வாந்தி பேதி. அதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாக வாந்தி பேதியில்தான் சாக வேண்டியிருக்கும் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுமில்லை.

அவர்கள் மரணமடைந்தவுடன், அவர்கள் வேண்டுகோளின்படியே முன்பே வாங்கி வைத்திருந்த இடத்தில் சமாதியில் அவர்களது உடலை அடக்கம் செய்தோம். அங்கு ஒரு சமாதி கட்டப்பட்டது. இந்த சமாதிக்கு வருஷா வருஷம் அவர்கள் திதியன்று நான் பூஜை செய்து வருகிறேன்.

பிறகு 1895-ஆம் வருஷம் எங்கள எழும்பூர் பங்களாவில் காலமான என் தகப்பனாருக்கு தகனக்கிரியை ஆன பிறகு அவர்களுடைய அஸ்தியை சேமித்து இந்த சமாதியில் புதைத்திருக்கிறோம். இவர்கள் திதியன்றும் சமாதி பூஜை செய்து வருகிறேன் இன்றளவும்.

என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது மைல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு கிராமம். அவருக்கு அந்த கிராமத்திலும் அதற்கடுத்த கிராமமாகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் ஜீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர் ஸ்ரீரங்கப்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/11&oldid=1112813" இலிருந்து மீள்விக்கப்பட்டது