பக்கம்:என் சுயசரிதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இன்னெரு விஷயத்தை இங்கு எழுதுகிறேன். நான் பிரசி டென்ஸி காலேஜிலிருந்தும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் காலேஜிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் செனெட் அவுஸில் பரிட்சைக்காக தினம் சந்தித்து பத்தியான போஜன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் ஸ்பெஷல் சப்ஜெக்ட் புஸ்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்கால பரிட்சை பேபரில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களை சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் ஹாலுக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் 3 எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘ஜோஸ்யம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

1892-ஆம் வருஷம் பிரசிடென்சி காலேஜில் இன்னொரு வருஷம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் பிரசிடென்சி காலேஜில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் கோல்ட் மெடல் (Norten gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஹாமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/28&oldid=1123265" இலிருந்து மீள்விக்கப்பட்டது