பக்கம்:என் சுயசரிதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

களில் ஏதாவது பிரிய வேண்டி யிருந்தபோதிலும் மத்தியானம் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒருங்கு சேர்வோம். சாயங்காலங்களில் இருவரும் சுகுணவிலாச சபைக்கு ஓடிப் போவோம்!

வெளிப்படையாகக் கூறுமிடத்தில் முதல் வருஷமெல்லாம் கோர்ட்டுகளைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழித்தேன். 1898-ஆம் வருஷம் ஆரம்பத்தில் ‘நாம் வக்கீலாக கோர்ட் ரிகார்ட்களில் பதிப்பிக்கபட்டு என்ரோல் (enrol) ஆகி வக்கீல் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமே’ என்று பயந்தவனாய் 6 மாதம் ஜேம்ஸ் ஷார்ட் ஆபீஸில் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் ஒத்துழைத்து கோர்ட் நடவடிக்கைகளை நடத்தும் விதங்களையெல்லாம் சற்றேறக்குறைய முழுவதும் கற்றுக் கொண்டேன். குமாரசாமி சாஸ்திரியார் அவர்களிடம் வித்தியார்த்தியாய் இருந்தபோதிலும் அவாது ஆபீஸில் நான் அதிகமாக ஒன்றும் கற்றவனன்று. இது அவர் தப்பிதம் அல்ல. என் தப்பிதம் தான் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 1898-ஆம் வருஷம் ஜூலை மாதம் நான் ஹை கோர்டு வக்கீலாக என்ரோல் (enrol} செய்யப்பட்டேன்.

வக்கீலாக வேலை பார்த்தது

என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே ஐகோர்ட் வக்கீலாக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வக்கீலாக அமர்ந்தேன். குமாஸ்தா, வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கஷ்டப் படாதபடி ஆயிற்று.

நான் என்ரோல் (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வியாஜ்யத்தை நடத்தினேன். சென்னையில் ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் முதல்முதல் ஒரு வியாஜ்யத்தில் பீஸ் பெற்றது, அக் கோர்ட்டில் ரிஜிஸ்டிரர் முன்பாக. ஜேம்ஸ் ஷார்ட்டிற்காக ஒரு சிறு வியாஜ்யத்தை நடத்தி வெற்றி பெற்றேன்.

அதுமுதல் சின்ன கோர்ட்டிலேயே பெரும்பாலும் வக்கில் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் சிடி சிவில் கோர்ட். (City Civil Court) டுக்கும் போவேன். சீக்கிரம் போலீஸ் கோர்ட்டுக்கும் போக ஆரம்பித்தேன். ஐகோர்ட்டில் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/31&oldid=1112830" இலிருந்து மீள்விக்கப்பட்டது