பக்கம்:என் சுயசரிதை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவைகளைப் பற்றி பல விஷயங்களை அறிய விரும்புபவர்கள் அந்நூலில் கண்டுக் கொள்ள வேண்டுகிறேன். ஆயினும் அந்நாடகங்களின் பெயர்களை மாத்திரம் இங்கு என் சுயசாதனையை எழுதுங்கால் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அந்நாடகங்கள் அடியில் வருமாறு:- புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ரத்னாவளி, சத்குஜித், நற்குல தெய்வம், காலவரிஷி, மார்க்கண்டேயர், காதலர் கண்கள், விரும்பிய விதமே, பேயல்ல பெண்மணியே, அமலாதித்யன், வாணிபுர வணிகன், சபாபதி 1ம் பாகம், சிம்ஹௗ நாதன், வேதாள உலகம், பொன்விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், ரஜபுத்ர வீரன், விஜயரங்கம், கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், ஊர்வசியின் சாபம், புத்த அவதாரம், அரிச்சந்திரன், வள்ளிமணம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி 2ம் பாகம், சந்திரஹரி, ஓர் ஒத்திகை அல்லது சபாபதி 3ம் பாகம், தாசிப் பெண், சுபத்ரா அர்ஜுன், கொடையாளிக் கர்ணன், மனைவியால் மீண்டவன், சகதேவன் சூழ்ச்சி, சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், சகுந்தலை, விக்கிரமோர்வசி, மாளவிகாக்னி மித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், உண்மையான சகோதரன், சபாபதி 4ம் பாகம், காளப்பன் கள்ளத்தனம், பிராம்மணனும் சூத்திரனும், உத்தம பத்தினி, குறமகள், வைகுண்ட வைத்தியர், சதி.சுலோசனா ஆம்.

இனி 1936-ஆம் வருடத்திற்குப் பிறகு நான் எழுதிய நாடகங்களைப் பற்றி சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

நல்ல தங்காள்: இது ஒரு பழைய கதையை நாடகமாக என்னால் எழுதப்பட்டது. இதை 1936 ஆம் வருஷம் அச்சிட்டேன்.

ஏமாந்த இரண்டு திருடர்கள்: இது ஒரு சிறந்த ஹாஸ்ய நாடிகையாம். இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன். எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. சபாபதி 5ஆம் பாகம் அல்லது மாறுவேட விருந்து :- இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

சோம்பேறி சகுனம் பார்த்தது: இதுவும் ஒரு ஹாஸ்ய நாடிகையாம். இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/49&oldid=1110147" இலிருந்து மீள்விக்கப்பட்டது