பக்கம்:என் சுயசரிதை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அக்கலாசாலையில் படிக்கும்போது என் தகப்பனாரும் அவர் தம்பியாகிய சோமசுந்தர முதலியாரும் பெற்ற சில பரிசுப் புஸ்தகங்கள் அவர்கள் பெயருடன் என் வசம் இன்னும் இருக்கின்றன.

மேற்கண்ட பரிட்சையில் தேறின உடனே அவர் அக் கலாசாலையிலேயே சீக்கிரம் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டதாக என் தகப்பனார் எனக்குத் தெரிவித்திருக்கிறார். பிறகு அந்த ஸ்தானத்திலிருந்து மதுரை ஜில்லாவில் பள்ளிக்கூடங்களுக்கு டெபுடி இன்ஸ்பெக்டர் (Deputy Inspector of Schools) ஆக கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் ரூபாய் 250 சம்பளம். பிற்பாடு அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 400. இவ் வேலையிலிருந்து தன் அறுபதாம் ஆண்டில் 1890ஆம் வருஷம் உபகார சம்பளம் (பென்ஷன்) வாங்கிக்கொண்டு விலகினார்.

என் தகப்பனார் தன் ஆயுள் பர்யந்தம் பெரும் உழைப்பாளி யாயிருந்தார் என்றே நான் சொல்லவேண்டும். அவர் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் ஒரு முக்கிய அங்கத்தினராக உழைத்தார். அதற்காக பல புத்தகங்களை தமிழில் எழுதி பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் திராவிட பாஷையில் நூதன புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட School books and Vernacular Literature Society என்னும் சபையில் தன் ஆயுள் பர்யந்தம் அங்கத்தினராக இருந்தார். இச்சமயத்திலும் சில தமிழ் புத்தகங்களை அவர் வெளியிட்டார். அவற்றுள் பம்மல் விஜயரங்க முதலியாருடைய மூன்றாவது வகுப்பு வாசக புஸ்தகம் என்னும் நூலை அவர் எழுதி பதிப்பித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. சென்னையில் அக்காலம் பார்க் பேர் {Park Fair) வருஷா வருஷம் நடத்தப்பட்ட வேடிக்கையின் காரியதரிசியாக 1881-ஆம் வருஷம் முதல் 1886-ஆம் வருஷம் வரையில் அவர் இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. சென்னையில் விஜய நகரம் மகாராஜா அவர்கள் அக்காலம் ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்கு காரியதரிசியாயிருந்தார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) மெம்பராக தன் ஆயுள் பர்யந்தம் இருந்தார். மேற்படி யூனிவர்சிடியாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் பரீட்சகர்களின் போர்ட்டுக்கு (Board

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/7&oldid=1112877" இலிருந்து மீள்விக்கப்பட்டது