பக்கம்:என் தந்தை தாயர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம் 1 பக். (பெட்டியின் மேலிருக்கும் துணியில் மறைந்திருந்த) மொள்ள -மொள்ள ! (கீழே குதிக்கிருன்.) பலே. அண்ணு -நீங்களா ? ஓ - என்னடா பளுவு அதி கமாயிருக்குதே ! இண்ணு பாத்தேன் ! பக், அண்ணுவெல்லாம் இருக்கட்டும் - சத்தியம் பண்ணி விட்டு என்னெ கெணத்திலே வுட்டுட்டு வர பாத்தை யா - திருட்டுக் கழுதை ! அவனே அடிக்க இருவரும் சண்டை போடுகின்றனர்.) தலையாரி தாண்டவராய பிள்ளை இரண்டு ஆட்களுடன் . வருகிருன். தா. என்னடாப்பா ? இங்கே கலாடா ? இருவரும். தலையாரி ! தலையாரி ! தா. என்ன செய்யரைங்க இங்கே ! பக், ஒண்னும் இல்ல அண்ணு-காங்க குத்துசண்டே பழக ரோம் ! . . தா. ஆமாம் இதென்ன பொட்டி? -அடே ! புடிச்சிக்கிங் கோரெண்டு பேரையும். அந்த அப்பாசாமி மொதலி பிராது கொடுத்திருக்கராரு, தன் விட்டிலே இரு பொட்டிகானமெ போச்சிண்னு அவர் சொன்ன அடையாளத்துலே இதுவா தானிருக்கணும். (ஆட்கள் இரண்டு திருடர்களையும் பிடித்துக் கொள்கின்றனர்.) பலே. அண்ணு! அண்ணு! எங்களே எப்படியாவது தப்பிச்சு வுடுங்கள். பக். அண்ணு இந்த பொட்டியிலே இருக்கரத்துலே நீங்க ஒரு பங்கு எடுத்துகுங்க ! பலே. ஆமாம் அண்ணு-மூணு பங்கு போட்டு, நீங்க இரு பங்கு எடுத்துகுங்க. எங்களுக்கு இரண்டு பங்கு கொடுத்துடுங்க-ரெண்டு பேருக்கும். தலையாரியின் ஆட்கள். எங்களுக்கு ?