பக்கம்:என் தந்தை தாயர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[காட்சி.2]

ஏமாந்த இரண்டு திருடர்கள்

7

மூன்றாம் காட்சி

இடம்-அதே இடம்.

காலம் - சாயங்காலம்.

அப்பாசாமி முதலியார். திண்ணையின் மீது உட்கார்ந்து கொண்டு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருக்கிறார். பக்கா திருடனும், பலே திருடனும் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

அ. ஏண்டாப்பா, ராத்திரி இங்கே திண்ணையிலே படுத்துகினு இருந்தும் பக்கத்தறையிலே எவனே திருடன் கன்னம் வைக்கப்பாத்ததே உங்களாலே கண்டு பிடிக்க முடியலையே! நான் தான் கெழவன்- உங்களுக் கென்னடாப்பா நல்ல வயசு காருங்கோ, எழுந்திருந்துபோய் அவனெ பிடிச்சி இருக்கக் கூடாது ?

பலே. இல்லெங்கோ- நல்ல தூக்கம் வந்துது ராத்திரி, எனக்கு ஒண்ணும் சத்தமே கேக்கலே.

பக். எனக்கு ஒடம்பெல்லா கொஞ்சம் வலியாயிருந்து துங்க-தூங்கிவுட்டேன்-அந்த தூக்கத்திலே அப்படியே-தெரியாதெ போச்சி.

அ. சரி இண்ணைக்காவது - ஜாக்கிரதையா யிருங்க.

(உள்ளே போகிறார்)

பலே. அண்ணா, நம்போ தோண்டன பள்ளத்தெ மண்ணெ போட்டு மூடிவுட்டும், இந்த கெழம் எப்படியோ அத்தெ கண்டு பிடிச்சுட்டுது பாத்தைங்களா ?

பக். போன போவது !-வேறே என்னமானலும் வழி தான் பாக்கனும்-தம்பி இண்ணைக்கி உன்வேலே என்ன மாயிருந்தது ?-அந்த மாட்டே சரியா மெய்க்கலே அவன், நீ நாளெக்கு அந்த வேலயெ பாரடா அப்பா இண்ணு என் கிட்ட சொல்லிச்சி அந்த கெழம்-அது என்ன சமாசாரம் !

பலே. மாட்டே சரியா மேய்க்கலையா ?-அது பச்சை பில்லே ரொம்ப திண்ணுட்டு தள்ளாடிகினு வந்து சேர்ந்தது ஊட்டுக்கு! - ரொம்ப நல்ல மாடு. மேய்க்க காட்டுக்குப் போனவுடனே, அவுத்து உட்டேன், அதுவா பெசாதே மேய்ஞ்சிகினு இருந்துது-நான் நண்ணா