பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

என் தமிழ்ப்பணி

படப்பிடிப்பைக் காணும் வாய்ப்பினை பெற்றார் அனைவரும் உணர்வர்.

பழைய தமிழ் இலக்கியங்கள், அகப்பொருள் உணர்த்துவன, புறப்பொருள் உணர்த்துவன என இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படும். ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் அன்பு வாழ்க்கையில் அவர் மனத்திடை நிழலாடும் உயிரோட்டங்களை உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்துவன அகப்பாடல்கள்; அம்மக்களின் அகவாழ்விற்குத் துணையாய் அமைந்து, அதை வளப்படுத்த உதவும் பொருளீட்டும் வகை, போராற்றும் வகை, அரசியல் அறம் ஆகியவற்றை உணர்த்துவன புறப்பாடல்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை, இற்றைத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக அகப்பொருளும் புறப்பொருளும் உடையவாக ஆயிரம் ஆயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள் அக்காலப் புலவர் பெருமக்கள்.

ஆனால் அப்பாக்களின் களஞ்சியத்தை அழியாமல் காக்க வல்ல வாய்ப்பு, இன்று உள்ளது போல் அன்று இல்லாமையால் எத்தனையோ ஆயிரம் பாக்கள் மறைந்து அழிந்துவிட்டன.இவ்வழிவு நிலைதொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வரும்போது, நம் முன்னோர் ஈட்டிவைத்த அப்பெருநிதியை இறவாமல் காக்க வேண்டும் எனும் கடமையுணர்வு வரப்பெற்று ஒரு சில பெரியவர்கள் முனைந்து முயன்று அவ்வகையில் ஓரளவு வெற்றி கண்டனர்.

தம்காலத்தில் கிடைத்த பாக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள்வளம், அப்பாக்களின் அடி அளவு, ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களை எல்லாம் பத்துப்பாட்டு, எட்டுத்-