பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

என் தமிழ்ப்பணி

பட்டான்; எத்தனை நாள் காத்துக் கிடந்தான்; எத்தனை இடையூறுகளைத் தாங்கிக் கொண்டான்; பிறரால் பணிந்து நிற்க வேண்டாப் பெருநிதி படைத்த அவன் இவள் பொருட்டு எவ்வளவு பணிவு காட்டினான்: இவளை அடையும் ஆர்வ மிகுதியால் அச்சத்தையும் கைவிட்டு வாழ்ந்தான். பாண! இவளோடு களவுக்காதல் கொண்டு வாழ்ந்த காலத்தில் அவன் இவளைத் தேடி நாள் தோறும் வருவன்; அவன் வருங்காலம், கடல் அலை ஓய்ந்து ஒலி அடங்கும் இரவுக் காலமாதலின் தொழில் ஒழிந்து தோணிகளைக் கரைக்கண் விடுத்து, இவள் தந்தையும் தமையன்மாரும் வீட்டிலேயே இருப்பர்; அவர்கள் இருக்கும்போது அங்குச் செல்லுதல் கூடாதே; அவர்கள் நனிமிகக் கொடியவராயிற்றே அவர்கள் கண்ணில்பட்டு விட்டால் பெருங்கேடு நேருமே என எண்ணி அஞ்சான்; அவர்கள் இருக்கும்போதே இவளைக் காண வருவன்; அம்மட்டோ! இடைவழியில் ஆழம்மிக்க உப்பங்கழிகள் பல குறுக்கிட்டுக் கிடக்கும்.

அவற்றில் ஆளைக் கொல்லும் சுறா போலும் கொடிய மீன்கள் இரைதேடி அலைந்து கொண்டிருக்கும். அத்தகைய கழிகளைக் கண்டும் அவன் கலங்கி நின்று விடான்; அது மட்டுமன்று இவர்கள் 'கனவுக் காதலை அறிந்து கொண்ட இவ்வூர்ப் பெண்டிர் சிலர் ஊரில் அலர் எழுப்பியிருந்தனர். அவ்வலர் கேட்ட அன்னை முதலாயினர் இவள் பால் சினங்கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஆங்கு வருதல் கூடாது. அதனால் இருவர் நலத்திற்கும் கேடுண்டாம் என எண்ணி வாராது இருந்து விடான்: அப்போதும் வருவான்: மாண்பு மிக்க அணிகளால் அழகு பெற்று விளங்கும் நெடிய பெரிய தேரில் வருவான்.

ஊர்ப்புறத்தே நெடிது பொழுது காத்துக் கிடக்க, இவள் வருகையை நோக்கி இரவு பகல் எப்பொழுதும்