பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

113

இருந்து வருந்துவான். அவ்வாறு வந்து காத்துக் கிடந்தது ஒருநாள் இரு நாள் அல்ல: பலநாள்: அத்தகையவன் இன்று இவளை மறந்துவிட்டான்: அன்று அடைவதற்கு அரிதாகத் தோன்றிய இவள் காதல், இன்று கசந்து விட்டது போலும்: அதை மறந்துவிட்டான். இங்கு வருவதை அறவே கைவிட்டான்.

“பாண! அவன் இவளை மறந்து விட்டான்; வேறு யாரேனுமாயின் நம்மை மறந்துவிட்ட அவன் உறவு தமக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று எண்ணி, அவனைத் தாமும் மறந்து கைவிடுவர். ஆனால் இவள் அது செய்திலள்; மாறாக, அவனையே நினைந்து நைந்து உருகிறாள். அவள் கண்கள், இரவு பகல் எப்பொழுதும் நீர் சொரிந்த வண்ணம் உள்ளன; அதைக் கண்டு இவளைக் கடிந்து கொண்டாள். இவள் 'நான் என் காதற்கேடு குறித்துக் கண்ணிர் சொரிந்திலேன். தன் காதல் துணை பிரிந்து விட்டதே என்ற கலக்கத்தால் ஓயாது கூவி அழும் அன்றிலின் துயர்கண்டே என் கண்கள் அழுகின்றன. எனக்கூறி தன் துயரை மறைக்கிறாள். இத்தகையாளை நான் எவ்வாறு காப்பனோ? அறியேன்.'

“பாண! நீ ஒன்று செய்யின் நன்றாம். அவன் பரத்தையர் உறவு கொள்ள உறுதுணைபுரிந்தவன் நீ அன்றோ? அப்பழி நீங்க இன்று ஒன்று செய்: அவன் வாழும் பரத்தையர் சேரிக்குச் செல்; பண்புடைப் பெருமக்கள் எவரும். ஆங்குச் செல்லார்: ஆதலின், எம்பொருட்டு நீ செல்வதையும் நாணுகிறது எம் நெஞ்சம்: பிறர் காணின் எமக்குப் பெரும் பழியாம் என அஞ்சுகிறோம், ஆகவே பிறர் கண்ணில் படாவாறு செல்; சென்று, கடல் நாட்டு வாழ்ந்தமையால் நன்கு நீந்தக் கற்றிருந்தும் பரத்தையர் பெருவெள்ளத்தை நீந்திக் கரையேற மாட்டாது, அதனிடையே கிடந்து உழலும் அவனைக் கண்டு, இவள் நிலையினை அறிவித்துவா: பாண! அவனை அப்பரத்தையர் சேரிக்குக் கொண்டு