பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

127

பட்டினப் பாக்கத்து மக்களும் வந்து, தத்தமக்கு வேண்டும் பொருள்களை வாங்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் வண்ணம், நாளங்காடி இருபகுதிக்கும் இடையே அமைந்திருந்தது; மரங்கள் நெருங்க வளர்ந்த ஒரு பெரிய தோப்பினிடையே அமைந்த அந்நாளங்காடியில், கடைகல், அம்மரங்களையே தூண்களாகக் கொண்டு, கட்டபெற்றிருக்கும். பொருள்களை வாங்குவோரும்; விற்போரும் எழுப்பும் பேரொலி, அங்கு எக்காலத்தும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.11

கடை விதிகளில்,கடல் கடந்த நாடுகளியிருந்து கலங்கள் ஏற்றிக் கொணர்ந்த விரைந்து ஓடவல்ல குதிரைகளும், கரியர் மிளகுப் பொதிகளும். வடநாட்டு மலைபடு பொருள்களாய பொன்னும் மணியும், பொதிய மலையில் விளையும். அகிலும் ஆரமும், பாண்டி நாட்டுக் கடலில் மூழ்கி எடுத்த முத்தும் சோணாட்டுக் கடலில் கிடைக்கும் பவளமும், கங்கைச் சமவெளியினின்றும் வந்த யானை முதலாயனவும் காவிரியாற்றுப் பாய்ச்சலால் விளையும் பல்வகைப் பொருளும், ஈழநாட்டினின்றும் வந்த உணவுப் பொருளும், பர்மா என வழங்கும் கடாரத்தினின்றும் வந்த கணக்கற்ற பொருளும், அளவு அறியமாட்டாமல் நிறைந்து வளம் மிகுந்து கிடக்கும்.12

மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், வேதம் வல்லமறைவோரும். வேள்குடிவத்தோரும் வாழும் வீதிகளும், அரண்மனையைச் சூழ் அமைந்திருந்தன. மருத்துவரும், நாளறிந்து கூறும் கணியரும் தனித்தனியே வாழும் வீதிகளும், முத்துக் கோப்போர், வளையல் அறுப்போர் நாழிகைக் கணக்கர்,