பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கேள்விந்தனார்

23

கூறும் உள்ளுறை அந்நிலத்துப் பொருள்களாகவே இருத்தல் வேண்டும். தலைவனும் நற்றாயும் செவிலியும், பாங்கனும் எல்லா நிலங்களுக்கும் சென்று வந்தவர் ஆகவே அவர்கள் எப்பொருள் பற்றியும் உள்ளுறை கூற உரிமையடையவராவர்.

“கிழவி சொல்லின் அவளறி கிளவி”

“தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உரையாது”

“ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”

என்பன தொல்காப்பிய விதிகள்.