பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

25

துணையாய் வாய்த்திருந்தவள், அழகிற் சிறந்து விளங்கினாள். அவள் பால் அவன் தன் உயிரையே வைத்திருந்தான். மணம் முடிந்து சின்னாட்கள் தான் ஆயிருந்தன.

ஒருநாள், அவன், தன் இல்வாழ்க்கை நிலையினை எண்ணிப் பார்த்தான். வருவார்க்கு வழங்கி வாழும் தன் இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் தன்பால் இல்லாமையை உணர்ந்தான், அதனால் வற்றாப் பெருநிதியை அது கிடைக்கும் வெளிநாடு சென்றேனும் சேர்த்து வருதல் வேண்டும் எனத் துணிந்தான்.

அவன் நெஞ்சு, அந்நிலையில் ஆழ்ந்து கிடக்கும் அப்போது அவன் மனைவி அவன் முன் வந்து நின்றாள். அவள் உருவ நலனை இளைஞன் ஒருமுறை நோக்கினான் மனைப் புறத்து நொச்சிவேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியின்ற மலரும் பருவத்து அரும்புகள் வரிசையாகத் தோன்றுவது போலும் அவள் வெண்பற்களின் வனப்பைக் கண்டான். முல்லை அரும்புகளின் வெண்ணிறம் ஒன்றைக் கண்டு அதை விரும்பி அடைந்து, அதை விடுத்து வர மாட்டாது.அதையே சுற்றிச் சுற்றித் திரியும் வண்டுகள் போல், அவள் பல்லழகு ஒன்றிற்கே தான் தன் உணர்வு இழந்து எப்போதும் அவள் நினைவாகவேயிருந்து வருந்துவதை உணர்ந்தான். தன்னை அடிமை கொள்ள அப்பல்லழகு ஒன்றே போதியதாகவும்; அவள் அழகு அத்துடன் அமையவில்லை. அவள் வயிறும் அழகாயிருந்தது. அவள் இடையும் அழகாயிருந்தது.

பின்னப் பெற்றுப் பின்னால் கிடந்து தொடங்கும் கூந்தலை நாள் முழுதும் நின்று பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றிற்று. தோள் மலைவளர் மூங்கில் போன்றிருந்தது. அதன் பருமையும் மென்மையும் அதற்கு மேலும் நலம் அளித்தன.

என்-2