பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

37



தலைமகளைக் கண்ணுற்று வியந்து நிற்கும் நிலையில் தலைவன் கூறுவதாக அமையும் இப்பாட்டில் அன்னத்தின் நடைபோல நடை பெற்று “எனப் பொருள் தரும் என நடைவாய்ந்து” என்றதொடர் அமைந்திருப்பதைக்கண்டார் உரையாசிரியர்; தலைமகளை முதன்முதலாகக் கண்ட தலைமகன். அவள் பேரழகு கண்டு; மானோ மடமயிலோ, மலர் மகளோ, மான்மகளோ என ஐயுறுதற்குக் காரணமாய் வியப்புற்று நிற்கும் நிலையில் அவன் வாய் வழி வெளிப்படும் சொற்களே காட்சி எனும் துறை தழுவி வருதல் வேண்டும்; வியப்பு ஒருவாறு தனியக் தலை தூக்கிய ஐயம், அவள் கண் இமைத்தல், கால் நிலம் தோய்தல் முதலாயின. கண்டு அவள் மண்மகளே எனத் துணிவன், அவ்வாறு துணியத் துணை நிற்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய கால்நிலம் தோய்தல், அது நடை பயிற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளைக் காட்சி எனும் துறை அமைந்த செய்யுளில் கூறுவது அகத்திணை மரபுக்கு ஒவ்வாது; ஆனால் மணிவாசகப் பெருந்தகை அதை இச்செய்யுளில் கூறி விட்டார்: ஆகவே, “நடை கண்டானாயின், மேல் ஐயநிலை உணர்த்தல் வழுவாம் எனின், இவன் நடை, கண்டான். அல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்ன நடையை ஒக்கும் என்றான்” என அமைதி கூறி இருப்பது இலக்கண மரபு வழுவாது காக்கப்படல் வேண்டும்” என்பதில் உரையாசிரியர் காட்டும் ஆர்வத்தை உணர துணை புரிவதாகும்.

இவர் உரையில் செந்தமிழ் சிலம்பொலிக்கிறது என்றாலும் இடையிடை வடசொற்களின் வாடையும் வீசுவதும் உணர்கிறோம். முதற்பாட்டிற்கு வகுத்த உரையில் மட்டும் ஆபரணம், கலியாணம், கேசம், சிருங்காரம், தவிசு, நாயகர், பரதம், விகாரம், விசேஷத்து போலும் வடசொற்கள் இடம் பெற்றுள்ளன.