பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. பெருமை என்பது கெடுமோ?

கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் உமணர் எனும் உப்பு வணிகர் வண்டிகளை வரிசை வரிசையாக ஓட்டி வந்து நிறுத்தி உப்புப் பொதியேற்றும் காட்சியும், அவ்வண்டிகளில் பூட்டப்பெற்ற வலிய காளைகள் மலை நாடுகளிலும் மணல் வெளிகளிலும், கழிகளிலும், கழனிகளிலும் உப்புப் பொதியேற்றிய வண்டியுருள்கள் ஆழப் பதிந்த விடத்தும் மனம் தளராது மண்டியிட்டு ஈர்த்துச் செல்லும் இனிய காட்சியும் காண்பார் கண்களில் களிநடம் புரியப் பண்ணும்.

இத்தகைய உப்பு வணிகத்தால், அந்நாடு ஒருபால் உயர்வடைய, அந்நாட்டு உழவர்கள் தம் உழைப்பாலும், உயர்ந்த பண்பாலும் அந்நாட்டுப் பெருமையை மேலும் உயரப் பண்ணினர். நாட்டில் மக்கள் உழைக்க வேண்டாதே உண்டாம் உப்புச் செல்வம் மண்டிக் கிடக்கிறது: ஆகவே நாம் உழைக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை என அந்நாட்டு மக்கள் மனம் அடங்கி மடங்கியிரார்: உழுதும், விதைத்தும், விளைத்தும் பெறலாகும் நெல் மலைகள் அந்நாட்டின் களத்தோறும் கணக்கில்வாய் நின்று காட்சி அளிக்கும்; உழைத்து உருபொருள் பெற்ற உழவர், களம் நோக்கி வந்து பாடி