பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

என் தமிழ்ப்பணி

வெளியேற்றிச் செல்வதைக் கண்டு பழகிய அப்பரதவர் வலையின் பொறை கண்டு மலைக்காது மண்டியிட்டு ஈர்த்துக் கரை சேர்ப்பர்.

கரை சேர்ந்த வலைக்குள் இன இனமான மீன்கள் கணக்கிடற்கியலாதவாறு கூட்டமாய் அகப்பட்டிருக்கக் கண்டு அகம் மகிழ்வர்; அம் மகிழ்ச்சியால் ஆங்கு வந்து இரந்து நிற்கும் இரவலர்க்கு வழங்கி அவரைப் போக்கி விட்டு பின்னர் தம் பாதவர் குடியினைச் சேர்ந்தார் அனைவருக்கும், அவாவர் குடியளவிற்கு ஏற்பக் கூறிட்டுக் கொடுத்து விட்டு, எஞ்சியதை ஆங்கு வந்திருக்கும் மீன் வணிகர்பால் விலை பேசித் தருவர். முடிவில் கடன் முடித்த மன நிறைவாலும் கடல் வளைத்து ஈர்த்த உடல் தளர்வாலும் தம்மை மறந்து அம்மணல் மேட்டிலேயே கிடந்து உறங்கிவிடுவர்.

இத்தகைய பணவளமும் நிறைந்த நாட்டில் சிறந்து விளங்கிய குடியொன்றில் தோன்றிய ஓர் இளைஞன் உரிய புருவத்தில் பெண்ணொருத்திபால் காதல் கொண்டான். இளைஞன் நாட்டு உழவர்களும், நுளையர்களும் உழுதும் உழைத்தும் வருவார்க்கு வழங்கியும் வாழும் விழுமிய வாழ்க்கைப் பண்பாடு அவ்விளைஞன் பாலும் பொருந்தி யிருக்கும்; காதல் கொண்ட கன்னியை கடிதில் மணம் முடித்துக் கொண்டு மனையற வாழ்வு மேற்கோள்வன் என நம்பி, அப்பெண்ணும் அவனைக் காதலித்தாள்: இருவர் காதலும் வளர்ந்தது.

தொடக்கத்தில், காதலியைக் காணும் ஆர்வ மிகுதியால் கழிகளைக் கடக்கவோ, சாவண்ல மீறவோ அஞ்சாத அவன், நாள் ஆக ஆக ஆங்கு வரத் தயங்கினான். அவனைக் காண்பதும் அரிதாகி விட்டது. இன்நிலை அவளைப் பெரிதும் வருத்திற்று. காதலனை ஒரு நாள் காணாமை நேரினும்