பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவித்தனார்

41

உயிரிழந்தவள்போல் உறுதுயர் கொள்ளத் தொடங்கினாள்; இந்நிலையில் அவன் பல நாள் தொடர்ந்து வாரானகவே கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள்.

அம்மனக் கலக்கம் அவன் மேனி நலத்தை அழித்தது: மேனியின் பொன்னிறம் அழிந்து பசலை படர்ந்து பொலிவிழந்தது. மேனி மாற்றம் கண்ட ஊர்ப் பெண்டிர் அவள் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பித்துப் பழிக்கத் தலைப்பட்டனர்; அது அவள் அகத்துயரை மேலும் அதிகரித்தது: அது பொறாது இறந்து விடுவளோ எண்ணும்படியாகிவிட்டது அவள் நிலை.

அவர் காதலுக்குத் துணை புரிந்து அவர் காதலை வளர்த்த தோழி அந்நிலையை உணர்ந்தாள். இளைஞன் விரைவில் வந்து வரைந்து கொண்டிலனாயினும், ஒரு நாளேனும் வந்து அவள் நலம் வினாவிச் செல்லினும் நன்றாம். அது அவளை மேலும் சில நாட்கள் வாழச் செய்யும் என நம்பினாள்; ஆனால் அவனோ அவர் வாழும் வழியையும் மறந்து விட்டவன்போல் தோன்றினான்.

அதனால் அவள் அவன் மீது சினம் கொண்டான்; பண்பு மிக்க பேரூரில் பிறந்தவன். அதனால் அவனும் பண்புடையவனாவன் என நம்பியே, அன்று அவன்பால் பரிவு காட்டினாள்; அதனாலேயே அவர் காதலுக்குத் துணை புரித்தாள்; அப்பண்பு அவன்பால் இல்லை என்பதை இன்று உணர்ந்து உள்ளம் வருந்தினாள்; பிறந்த ஊர்ப் பண்பு அவனாலும் பொருந்தியிருப்பின் அவன் இவளை இந்நேரம் மணம் செய்து கொண்டு மனையற வாழ்வு மேற்கொண்டு பிற உயிர்களையும் வாழ்வித்துத் தானும் மகிழ்ந்து வாழ்வன்; ஆனால் அவன் அது செய்திலன்: தன்னாட்டுப் பெருங்குடிக் செல்வர்பால் காணலாம் சிறந்த பண்பினைப் பெறாத அவன்; அவர்பால் காணலாம் குறைபாட்டினை மட்டும் அப்படியே பெற்றுளான்.

என்-3