பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

43

அவள் மேனி தன் பொன்னிறம் இழந்து பாழுற்று விட்டது; இந்நிலையில் நீ அவளை அறவே மறந்து விட்டாய்; இது நின் பெருமைக்குப் பொருந்தாது; ஒருநாள் வந்து அவளைக் கண்டு “நின்மேனி வாடி விட்டதே; வாடியது ஏனோ? என அவள் நலனை வினாவி வருதல் கூடாதோ? அதனால் உன் பெருமை அழிந்து விடுமோ?


உன்னை எம்மூரில் யாரேனும் கண்டுவிடின் உன் பெருமை என்னாம் என எண்ணி அஞ்சுகின்றனையாயின் அத்தகைய நிலை இப்போது உண்டாகாது.


எங்கள் கானற் சோலைகள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவின்பெற்று விளங்கும் காலம் இது. தழைத்துத் தளிர் ஈன்று தண்ணென்றாகி மக்கள் மனத்திற்று மகிழ்ச்சியூட்டும் அச்சோலைகள், முத்துக்களை கொத்துக் கொத்தாக கோர்த்து வைத்தாற்போல் அரும்பீன்று கண்ணிற்கு விருந்தளிக்கும் காட்சிச் செல்வமும் வாய்த்துளது.


அச்சோலை இன்பத்தை நுகர மக்கள் எங்கெங்கிருந்தோ வருகின்றனர்; எவரெவரோ வந்து செல்கின்றனர். அதனால் அங்கு வரும் உன்னை ஐயக் கண் கொண்டு பார்ப்பவர் எவரும் இலராவர்; அதனால் உன் பெருமைக்கும் அழிவு நேராது. ஆங்கு வருதல் எமக்கும் எளிது.


கானற் சோலைக்கு வந்து காதலியைக் கண்டு அவள் நலம் வினாவின், அவளைச் சிலநாள் மேலும் வாழ்வித்த சிறப்பும் உனக்கு உண்டாம்; வருகின்றனையோ?” என வினாவுவாள்போல் அவன் அளித்த காதல் நோயால் அவள் படும் துயரையும், அது ஊரார் உணர்ந்து கொள்ளும் அளவு பெருகி விட்டதையும் இனியும் மணக்காது மறைந்து மறந்து வாழ்ந்தால் ஊரார் உரைக்கும் அலர், வேற்று