பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

47

பெறேமேயெனின் இவைபெற்றும் பெற்றிலேம்” எனக் கூறி வருந்தினான் என்பது பொருந்தாது.

“கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தொறும் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்; இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றும் இந்நூற்கு என்றார்.” என்றும் நக்கீரனார் உரை கண்டு குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” என்றும் நக்கீரர், தம்மைத் தாமே மிகைப் புகழ்ந்து கொண்டு படர்க்கையில் நிறுத்திப் பேசினார் என்பதும் பொருந்தாது.

நக்கீரனார் இயற்றிய கடைச்சங்க நூல்களில் ஓரிரு சொற்களே, வடசொற்களாக, இவ்வுரையில் கானுமிடமெல்லாம் சிட்டர், பிராமணன், காரணிகன், குமாரசுவாமி - முத்திரபுரிடம் சுவர்க்கம், வாசகம் போலும் வடசொற்கள் பயில இடம் பெற்றுள்ளன.

இவை போலும் காரணங்களைக் காட்டி. இவ்வுரை நக்கீரனார் செய்த உரையன்று. பிற்காலத்தில் பெயர் தெரியா யாரோ ஒருவர் செய்து நக்கீரனார் பெயர் சூட்டி விட்டார் எனக் கூறுவர் வேறு சிலர்.

யார் இயற்றிய உரையாயினும் இறையனார் அகப் பொருள் உரை தவிர்தொறும் நம் பயக்கும். நல்லுரையாகும் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு நூலுக்கு உரை எழுதுவார். அந்நூலில் வரும் பா ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு, அதில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு தொடருக்கும் தம் அறிவு ஆற்றல் துணை கொண்டு உரிய பொருள் உரைக்க வேண்டும்.

அவ்வாறு உரைக்கும் போது, அவற்றிற்குப் பிறர் என்னென்ன பொருள்களைக் கூறக் கூடும் என எண்ணிப்