பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

51

செல்வதும் உரைக்கு ஓர் அழகாம். உரையாசிரியரின் தெளிந்த அறிவுடைமைக்கு ஓர் அகச் சான்றாம். அகப்பொருள் உரையாசிரியர் அத்துறையிலும் முன்னிலையில் நிற்கின்றார்.

எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம் மெய்ம்மையை. உணர்வது அறிவு; காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் நிறை, ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் ஓர்ப்பு: கொண்ட பொருள் மறவாமை கடைப்பிடி; பெண்டிர்க்கு இயல்பக உள்ளதொரு தன்மை நாண்; கொளுத்துக் கொண்டு கொண்டது விடாமைமடம்:காணப் படாததொரு பொருள் கண்ட விடத்து உண்டாவது அச்சம்: பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை பயிர்ப்பு எனச் சொற்களுக்குக் கூறியிருக்கும் பொருள் விளக்கமும்,

தலைமகனும் தலைமகளும் தமியராய், ஒரு பொழிலகத்து எதிர்பட்டுத் தம் உணர்வினர். அன்றி வேட்கை மிகவினால் புணர்வது காமப் புணர்ச்சி, புலவரால் கூறப்பட்ட இயல்பினாலும் கந்தருவ வழக்கத்தோடு ஒத்த இயல்பினாலும் புணர்வது இயற்கைப் புணர்ச்சி; முயற்சியும் உளப்படும் இன்றித், தெய்வத் தன்மையால் புணர்தலின் தெய்வப் புணர்ச்சி; காதலன் நலம் காதலியினால் முன்னுற எய்தப்பட்டமையானும், காதலி நலம் காதலனால் முன்னுற எய்தப்பட்டமையானும் முன்னுறு புணர்ச்சி எனச் சொற்றொடர்களுக்குக் கூறியிருக்கும் பொருள் விளக்கமும் போற்றுதற்கு உரியன.

நூலாசிரியரோ, உரையாசிரியரோ மேற்கொள்ளும் சில சொல்லாட்சியும், சில பொருளாட்சியும், ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கணவிதி. இலக்கண மரபுகளுக்கு முரண்பட்டனபோல் தோன்றினும், அவற்றை ஒருவாறு ஏற்புடைய அமைதி கூறி ஏற்றுக் கொள்ளச் செய்வதே பின் வரும் ஆசிரியர்களின் நீங்காக் கடமையாகும். இதையும்