பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிக்தனார்

53

ஓர் இலக்கியச் செய்யுளுக்கும் விரிவான விளக்க உரைகளைக் கூறியிருப்பது அவர்தம் இலக்கியப் பேரறிவுக்குச் சிறந்த உதாரணமாகும்.

நயப்பு என்ற துறையை விளக்க அவர் காட்டிய “வேலும் என நின்று இகல் மலைந்தார்” என்ற கோவைச் செய்யுளில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்துச் செல்லும் முறை வியந்து பாராட்டற்கு உரியது.

பொதியில் என்பதற்கு எல்லாத் தேவர்களுக்கும் பொதுவாகிய இல் என்றும் மெல்லியல் என்பதற்கு மென்மை பெண்டிர்க்கு இயல்பு, அதனைத் தனக்குச் செய்து கோள் அன்றி இயல்பாக உடையாள் என்றும், செந்துவர்வாய் என்பதற்குச் செம்மையைத் தனக்கு மிகவுடையவாய் என்றவாறு, செம்மை உடையார் என்பது உலகத்துத் தம் குணங்களை மறையாது ஒழுகுவாரை என்றும் விளக்கம் அளிக்கும் வனப்பினைக் காண்க.

இவ்வாறு தருக்க நெறி நின்று வாதப் பிரதி வாதங்களை முன் வைத்துத் தம் பொருளை வலியுறுத்திக் கெஞ்சும் நிலையிலும் பொருள் விளக்கம் வேண்டி அழகிய உவமைகளை ஆளும் நிலையிலும், சொல் சொற்றொடர்களுக்குப் பொருந்தும் பொருள் உரைத்துச் செல்லும் நிலையிலும், இலக்கண அமைதியினை எடுத்தியம்பும் நிலையிலும். தென்றற் பூங்காற்றுப் போலும் இந்தமிழ் நடை வழங்கு முறையிலும், அகப்பொருள் உரையாசிரியர்க்கு நிகர் அவரே எனக் கூறுவதே சாலப் பொருந்தும்.