பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

என் தமிழ்ப்பணி


15. ஒளித்து இயங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ, யானே, எய்த்த

20. நோய்தணி காதலர் வரவு ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

திணை: குறிஞ்சி

துறை : தன்லமகன்சிறைப்புறத்தானாகத் தோழியால், சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியது.

புலவர் ; வெறி பாடிய காமக் கண்ணியார்.

1. அணங்கு - தெய்வம்.

2. கணங்கொள் - கூட்டமான, கான்கெழு = காடு பொருந்திய

3. அணங்கிய – வருந்திய; செல்லல்= நோய்.

4. மறுவால்-மனக் கவலையுற்ற

5. படியோர் - பகைவர். தேய்த்த = அழித்த.

9. சிலம்ப - ஒலிக்க

12. ஆரம் - சந்தனம் விடர் = குகை. தழைந்த மலர்ந்த

13. பட - ஒலிக்க

19. எய்த்த-வருந்திய

21. உலந்தமை - அழிந்தமை.