பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

என் தமிழ்ப்பணி



நீல வண்ணத் தோகையினை விரித்து நிற்கும் மயில் மீது, செம்மேனிச் செம்மானாகிய செவ்வேள் முருகன் வீற்றிருக்கும் காட்சியும், கடலிடை ஞாயிற்றின் காட்சி போல் கண்ணுக்கு விருந்தளிக்கும் கவின்மிகு காட்சியாம்.

மயில் மீது முருகன் காட்சியை அவன் அன்பர்களுக்குக் காட்ட விரும்பிய புலவர் நக்கீரர் கடலிடை ஞாயிற்றைக் காட்டி விளக்கி இருக்கும் திறம் நயந்து பாராட்டற்கு உரியது.

கடலிடை தோன்றும் ஞாயிறும் உலகத்தை வாழ்விப்பான்; மயில்மீது உலாவரும் முருகனும் உலகத்தை வாழ்விப்பான்; ஆகவே இவ்விருபெரும் காட்சிகளைக் காணும் பேறு பெற்றவர் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போவர். முருகனின் பேரொளிப் பிழம்பாய்ச் சேணெடுந் தொலைவும் சென்று ஒளிவீசும் அவ்வொளியைக் கண்விழித்துக் காணமாட்டாது: கண் இமைகளைக் குவித்துக் கொண்டு, அகக் கண்களால் காண்பர் அன்பர்கள். அத்தகு ஒளியினை உடையான் முருகன்.

அப் பேரொளிப் பெருமானைக் கண்ட அன்பர்கள் அவன் அருள் வேண்டி அவனைப் பணிந்து நிற்பராயின் அவர்க்கு வந்துள்ள துயர் எவ்வளவு பெரியதாயினும் அதைத் துடைத்து எரிந்து விட்டு அன்பர்களைக் காக்க வல்ல, கால் முதலாம் உரன்மிகு உடல் அமையப் பெற்றவன் முருகன்.

அவ்வாறு அன்பர்களுக்கு அருள்பாலிக்குங்கால் அதற்குத் தடையாக நிற்பார் எத்துணை வலியராயினும் அவர்களை அழித்து ஒழிக்க வல்ல ஆற்றல்மிகு கைகளை உடையவன். அக்கைகள் மலைகளையும் பொடிப்பொடியாக்கும் பேராற்றல் வாய்ந்த இடியேற்றிலும் மிக்க