பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று,

“வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி”
“மனையுறை புறாக்கள்”
“பெரும்பாணாற்றுப்படை - விளக்கவுரை”
“புலா அம் பாசறை”

ஆகிய இலக்கிய நூல்களையும்,

தமிழக வரலாறு-வரிசை என்ற தலைப்பில்,

“தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்”
“தமிழக வரலாறு-கோசர்கள்”
“தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்”

ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.

புலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத அவருடைய இலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து இன்று,

“என் தமிழ்ப்பணி”

என்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம். .

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிற்இத் தாம் மாய்ந்தனரே”

என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்றுவிட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_தமிழ்ப்பணி.pdf/7&oldid=1011196" இலிருந்து மீள்விக்கப்பட்டது