பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

79

நல்லுணர்வை வெளிப்படுத்தலாம். ஆக, அது; அவன் அகத்தே அடங்கிக் கிடக்கும் மனத்தின் நிலைக்கேற்ப உண்டாகிவிடும். ஆகவே, அவ்விரு நிலையும் அவ்விடத்திலேயே அடங்கி இருப்பன ஆகும்.

ஆனால், மக்களினத்தோடு கொள்ளும் தொடர்பால் உண்டாகும் விளைவு அத்தகையதன்று; ஒருவன் உணர்வாலும், உரையாலும், உடல் ஆற்றும் செயலாலும் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருந்தாலும், அத்தாய்மை அவன் சார்ந்து நிற்கும் இனத்தாரின் இயல்புக்கு ஏற்ப வேறுபட்டே தீரும். சார்ந்து நிற்பது நல்லினமாயின் அத்தூய்மை மேலும் வலுப்பெற்றுத் திகழும். சிற்றினத்தோடு சேர்ந்துவிடுவனாயின், அத்தாய்மை மெல்ல மெல்ல வலிவிழந்து, இறுதியில் அறவே அழிந்துபோக, தூய்மைக்கு மாறான நிலையே அவன்பால் குடி புகுந்துவிடும். சிற்றினத்தோடு சேர்ந்த பின்னரும் தூய்மையாக இருக்க இயலாது; இருக்க முயலலாம்; ஒரு சில காலம் இருக்கவும் செய்யலாம். தூய்மை கெடாமல் வாழும் அவ்வொரு சில கால வாழ்வையும், உலகம் ஐயப்பட்டே திரும்.

பனையடியில் அமர்ந்து பாலே பருகினாலும், உண்ணுவது பால் என ஏற்றுக் கொள்ளாது உலகம். மேலும், பனை அடியையே வாழ்விடமாகக் கொண்டு விட்டவனால், நீண்ட நாளைக்குப் பாலையே இயலாது. பால், பனங்கள்ளாக மாற நெடுங்காளம் ஆகாது. காலம் சிறிது ஆகும் ஆயிலும் பால்லாங் கள்ளாக மாறியே தீரும். ஆகவே, ஒருவன் உள்ளத்தால் எவ்வளவுதான் தூய்மையுடையவனாக இருப்பினும், அத்தூய்மை கெடாது நிற்க, அவ்வுணர்வுத் தூய்மை மட்டும் போதாது. அவன் சார்ந்த நிற்கும் இனமும் தூய்மையுடையதாதல் வேண்டும்.