பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. அரிதாகும் அவன் மார்பு!

வேட்டுவக்குடியில் வந்த ஓர் இளைஞன் ஒருநாள் வழக்கம்போல் வேட்டைமேற் சென்றான். வேட்டைக்குத் துணைபுரியும் அவனுடைய வளர்ப்பு நாய் அவனைப் பின் தொடர்ந்து விரைந்து வந்து கொண்டிருந்தது. அன்று, அவன் தன்னை அழகிய மலர்களால் ஆன மாலையால் அணி செய்து கொண்டிருந்தான். நிறத்தைப் போலவே நாற்றத்தாலும், பற்பல வகை மலர்களைச் கொண்ட அம்மாலையின் மணம் செல்லும் வழியெங்கும் சென்று நெடுநேரம் கழிந்த பின்னரும் நாறிக் கொண்டிருந்தது.

இவ்வாறு அணி செய்து கொண்டு, நாயோடும் வில் அம்புகளோடும் புறப்பட்ட அவன், வேட்டையாடிக் கொண்டே பலமலைக் கடந்து விந்து விட்டான். இறுதியில் ஒரு மலைச்சாரலை அடைந்தான். ஆங்கு அழகிய குரல் ஒலி கேட்டு, அவ்வொலி வந்த இடத்திற்குச் சென்றான். ஆங்கு அவன் காட்சி, அறிவு மயங்கும் பெருமகிழ்ச்சி அளித்தது.

அது ஒரு தினைப்புனம்; புனத்தின் நடுவே உயர்ந்த பரண் ஒன்று அமைந்திருந்தது. உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு ஓருருவானாற்போலும் உருவு நலம். வாய்க்கப் பெற்ற நங்கையொருத்தி, அப்பரண் மீது நின்றவாறே, கவண்முதலாம் கருவிகளின் துணையால் கிளியோட்டிக் கொண்டிருந்தாள். அவள் அழகையும் கிளி