பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

என் தமிழ்ப்பணி

வரவில்லை அவர் கடைசியாகக் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் தமிழ்நாடு பெயர் சூட்டு வெற்றி விழாதான்.

தனக்கென வாழாது பிறர்க்குரியாளராக வாழ்ந்தவர் அவர். தமிழர் வாழ்வும், தமிழ்நாட்டின் உயர்வுமே. அவருடைய லட்சியங்களாக இருந்தன.

அந்த லட்சிய வாழ்க்கையே வாழக்கை என்று வள்ளுவர் கூறுகிறார். அப்படி வாழ்பவர்களே வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்றும், வள்ளுவர் சொல்கிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அதனாலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர். காந்தியடிகள் போன்றோரைத் தெய்வமாக்கியுள்ள நாம், அறிஞர் அண்ணாவையும் தெய்வமாக்கிக் கொண்டுள்ளோம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வாழ்க்கைக்கு வழி காட்டினார் வள்ளுவப் பெருந்தகை. அந்த வழியில் தனக்கென வாழாது பிறர்க்குரியராக வாழ்ந்தவர்களுள் அண்ணாவும் ஒருவர். அதனாலேயே அவர் தெய்வம் ஆக்கப்பட்டிருக்கிறார்.