பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

175


பொதுச் சமுத்திரத்திற்குள்
ஒரு
புயல்வீச்சு


கலைஞரை பலர் முன்னிலையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு 11.6.2000 அன்று ஏற்பட்டது.

முன்பு கலைஞரிடம் நான் சமர்ப்பித்த குறிப்பின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பை நிறுவியது. இதன் பொதுக்குழு உறுப்பினராக நானும் நியமிக்கப் பட்டிருந்தேன். இந்த அமைப்பிற்கு கலைஞர் முதல்வராக அல்ல, இலக்கியவாதி என்ற முறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழண்ணல் துணைத்தலைவர் முனைவர் நாகராஜன் அவர்கள் தனி அலுவலர். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்கள் புரவலர். தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கலைஞர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - நடைபெற்றது.

பொதுக் குழுவில் தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், ச.மெய்யப்பன், கா.பா.அறவாணன், சா.வே. சுப்பிரமணியன், ஆங்கில இலக்கிய வித்தகர் சு. செல்லப்பன், ‘காவ்யா’ சண்முக சுந்தரம், நாட்டுப்புற இயல் வித்தகர்களான பேராசிரியர்கள் லூர்து, கே.ஏ. குணசேகரன், எழுத்தாளர்கள் சாவி, கோவி. மணிசேகரன், சுஜாதா, நவீன நாடக விற்பன்னர் மு.ராமசாமி, வானொலித்துறை நிபுணர் மன்னர் மன்னன் உள்ளிட்ட பலர் பொதுக்குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டார்கள். இந்தக் குழுக் கூட்டத்தில் அப்போதைய நிதித்துறை செயலாளரும், எனது பல்லாண்டுகால நண்பருமான ராஜாராம் இ. ஆ. ப. அவர்களும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எழுத்தாளர் ம. ராஜேந்திரனும் கலந்துக் கொண்டார்கள். மத்திய சாகித்திய