பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

65


அன்பாலயத்தில்
ஒரு
அதிகப் பிரசங்கித்தனம்


சென்னை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நீதிமன்றம் சென்று பின்னர் மேல் மட்டத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பெங்களுரில் மத்திய அரசின் களவிளம்பரத்துறை மாநில தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றேன். கன்னட ஊழியர்கள், என்னை பிறவி எதிரியாகவே பார்த்தார்கள். இதற்கு நம்மவர்களின் உலகாண்ட தத்துவமும், அந்த மாநிலத்தின் அரசியலில் ஒன்றிருக்காமல் தி.மு.க. அ.தி.மு.க என்று கட்சி வைத்துக் கொண்டு இங்குள்ள சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக போனதும் ஒரு காரணம். இதனால், கன்னட ஊழியர்கள், நானும் உலகாண்ட தமிழன் பரம்பரை என்று என்னை ஒரு மாதிரி பார்த்தபோது, நான் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தை ஒரு மாறுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும் அணுக வேண்டியதாயிற்று.

இங்கேதான், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெங்களுர் சண்முகசுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பு ஒரு மாத வாக்கில் தீவிர நட்பாகி விட்டது. இவர் சிறியன சிந்தியாத மனிதர். வள்ளலார் பக்தர். அதே சமயம் தமிழ்ச் சாதியிடம் கொண்ட தணியாத காதலால் விடுதலைப்புலிகளின் உள்நாட்டுப் போரை தீவிரமாக ஆதரித்தவர். இவர் உதவியில் பல விடுதலைப் புலிகள் தங்கி இருந்தனர். என் மீதும் அன்பு பொழிந்தனர்

அப்போது இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளை மட்டும் அல்லாது வேறு வழியில்லாமல் அவர்களை ஆதரிக்கும் இலங்கை தமிழர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்தது.

ஏ 5