பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

87


இந்தக் கால கட்டத்தில் மத்திய அமைச்சர் தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் உபேந்திரா புதுவைக்குச் சென்ற போது அவரோடு நானும் உடன் சென்றேன். புதுவை அரசினர் மாளிகையில் உபேந்திரா அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, கலைஞரின் நடுநிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, வை.கோ. போன்றவர்கள் திமுகவின் பெயரால் விடுதலைப்புலிகளின் அடாத செயல்களை ஆதரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் செய்திப் பிரிவையும் அப்படியே ஆக்குவதற்கு வை.கோ. நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினேன். ஆகையால், நான் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறப் போவதாகக் குறிப்பிட்டேன். உடனே அமைச்சர் ‘வைகோ. ஒரு தீவிரவாதி, அவரைப் பொருட்படுத்தாதீர்கள். சிக்கல் வரும்போது முதல்வரையோ அல்லது முரசொலி மாறனையோ சந்தித்து ஆலோசனை கேளுங்கள், நான் உங்களை மாற்றப் போவதாக இல்லை’ என்று பதிலளித்தார். பேச்சு வாக்கில் வைகோ போன்றவர்களால் திமுக மக்களிடையே செல்வாக்கு இழந்து வருகிறது என்று சொல்லிவிட்டேன்.

மறுநாள் உபந்திராவுடன் சென்னைக்குத் திரும்பினேன். மாலையில் புதுடில்லிக்குப் புறப்பட்ட அவரை, சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் சந்தித்தேன். உடனே அவர் ‘நீங்கள் காங்கிரஸ்காரரா’ என்று கேட்டார். உடனே நான் ஒரு காலத்தில்’ என்றேன். ‘நேற்று இரவு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ராஜிவ் காந்தியின் பேச்சை செய்தியில் போட்டு விட்டு, அதற்கு பதிலளித்த பிரதமர் வி.பி.சிங்கின் பேச்சை நீங்கள் ஏன் போடவில்லை?’ என்று கோபமாகக் கேட்டார். உடனே நான், செய்தி வெளியான அன்றிரவு அவருடன் புதுவையில் இருந்ததை சுட்டிக்காட்டி, அந்தச் செய்தியை இன்னொரு செய்தியாசிரியரான நரசிம்மச்சாரி போட்டிருப்பார் என்று விளக்கினேன். உபேந்திராவின் கோபம் புன்முறுவலானது. கலைஞரை சந்தித்து விளக்கம் சொல்லும்படி ஆணையிட்டுச் சென்று விட்டார்.

பத்திரிகைகள் போல் அல்லாது, வானொலி தொலைக் காட்சிகளுக்கு ஒரு வசதி உண்டு. செய்தி முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு கூட கடைசி செய்தியை சேர்த்து விடலாம். ஆனால் நான் இல்லாதபோது இரவு எட்டு நாற்பதற்கு ஒளிபரப்பாகும் செய்திக்கு எட்டு மணிக்கே டெலிபிரிண்டர் பக்கம் போக மாட்டார்கள். இதன் விளைவு தான் எட்டு மணிக்கு