பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 வா, ச. ராமாமிருதம்

இன்று அவன் படுக்கையில், பாவு grవ ఆణLGHత్త அவன்மேல் படர்த்து இல்ல்ை ஒரு பாதி எரிந்து, நூல்கள் அறுந்துபோய் ஒரு மூலையில் கிடந்தது.

தாக்கமற்று முன்னும் பின்னுமாய்ப் புரளுகையில், அவன் கைகள் உயிரற்று வெறும் பாயில் விழுந்தன.

தப் பாழும் பொழுதுதான் விடியுமா?

அவன் தாய் முக்கி முனகிக்கொண்டு எழுந்து வாசலில் சாணித் தெளிக்கிறாள்; வயது காலத்தில்.

ஆயினும் அவர்கள் தொழிலில் வயதுக்காரர் வய தானவர் எல்லோருக்கும் வேலை உண்டு, கம்மாயிருக்க முடியாது. இளமையிலிருந்து மூப்புவரை அவர்கள் வாழ்க் கையே, இழைக்கு இழை பின்னி நெய்த துணிபோலவே தான் மூச்சுக்கு மூச்சு இழை. இழைக்கு இழை மூச்சு.

ஆயினும், இப்பொழுது அவன் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து ஏதோ கைக்கடங்காத நாடாபோல், இளமையின் விகாரங்கள் அவன் மனதில் கட்டுக்கடங்காத கட்டான்களை விழைத்தன. கட்டை விரலும் கட்டு விரலும் இழையை நிமிட்டிக் கொண்டிருக்கையிலேயே திடீரென்று அவைகளின் செயல் நின்றுவிடும். மனக்கண்ணெதிரில் அவள் உரு எழும், உட்செவியில், அவன் அணைப்பில், ஆசை வெறி யில் அவள் திணறும் மூச்சின் ஓசை உள் வாசனையில் மனத்தை மயக்கும் அவன் உடல் நாற்றம்.

அடே கொழந்தே என்ன .' அப்படியே கல்லா சமைஞ் சுட்டே? துணியை எடுத்துக்கிட்டு போக வேணாமாடா..."

இப்பொழுது அவன் மாமனார் கடையில் நெய்த துணி யைப் போடுவதற்கில்லை. வாரா வாரம் மூணு மைல் நடந்து பக்கத்து ஊருக்குப்போய் விற்றுவிட்டு நூலை வாங்கி வரனும், போகிற வழியிலும் வருகிற வழியிலும் அவனைக்