பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 99

தாண்டா பொறந்தே. எனக்கு வேறே பொண்ணு கூட இல்லேடா, மருமவள நினைக்கல்லேடா, மகளாய்த் தாண்டா நெனைச்சேன், ஒங்க இரண்டு பேருக்குமில்லாத சுகம் எனக்கென்னடா? நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா யிருக்கறதைப் பாக்கறதுதானேடா எனக்கு சந்தோஷம். என் வயசுக் காலத்திலே-நான் என்னடா என்னோடே தூக்கிக்கொண்டு போவப்போறேன்!...

வீண் அபவாதம் தாங்காமல் அவள் மனம் முறிந்து அழு கையில், அவன் தோள்களிடையில் தலை குனியும், அந்த சமயத்தில் அவன் மூளையைக் குழப்பும் உணர்ச்சிகள் ஒன்றா பிரண்டா?

கடைசீலே எல்லாம், சாக்கடையிலே சக்கரம் சாஞ்ச தேர் மாதிரி ஒரு காலனாப்பூவிலேதான் வந்து நின்னு போச்சு, தன்னையே அவள்கிட்டக் கொடுத்துவிட்டு அவன் தவிக்கிறது. பெரிசில்லே. ஒரு காலணாப் பூதான், அவனை விட, எல்லாத்தையும்விடப் .ெ ப. ரி சு. இதுவரையில் பொட்டலமாயிருந்த குடும்ப கெளரவம், எப்படி சீர்ப்படு கிறது-ஒரு காரணமுமில்லாமே!

நாளடைவில் இன்னொரு சமாசாரம், உடல்மேல் முலு, முலு வென்று ஊறும் எரும்புபோல் அவனுக் கெட்டிற்று: வீட்டைவிட்டு வெளியேறினதிலிருந்து அவள் ஸ்னானம் பண்ணவில்லையென்று. அவன் உடலை ஒரு பெரும் வேகம் ஊடுருவியது. அவளைப் போய்ப் பார்க்கலாமா?

இரவில் படுக்கையில், திடீர் திடீரென்று, தீப்பந்தத்தில் குங்கிலியம் போட்டது போன்று, அவ்வெண்ணம் அவனை வாட்டுகையில், வேதனையில் சைகள் முஷ்டித்தன, உடல் அதிர்ந்தது. ஆசை பெருக்கெடுக்கையில் நியாயம், அநி யாயம், சரி, தப்பு ரெண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற புத் திகூட அடித்துக்கொண்டு போய்விடுகிறது, .ب**ہب .*